தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சர்வானந்த் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸான  மஹா சமுத்திரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சித்தார்த் மற்றும் சர்வானந்த் இணைந்து நடித்து வெளிவந்த மஹா சமுத்திரம் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ரிலீஸானது. 

தெலுங்கு திரையுலகில் மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகிலும் பல திரைப்படங்களிலும் நடித்து வரும் சர்வானந்த் எங்கேயும் முன்னதாக எப்போதும், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து மீண்டும் தமிழில் சர்வானந்த் நடிப்பில் கணம் திரைப்படம் ரிலீசாகவுள்ளது.

தெலுங்கில் ஓகே ஒக்க ஜீவிதம் என்ற பெயரிலும் தமிழில் கணம் என்ற பெயரிலும் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவர உள்ள கணம் படத்தை இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் எழுதி இயக்கியுள்ளார். நடிகை ரித்து வர்மா கதாநாயகியாக நடிக்க, நடிகர்கள் நாசர்,ரமேஷ் திலக் மற்றும் சதீஷ் உடன் இணைந்து நடிகை அமலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கணம் படத்திற்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவில், ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு செய்ய, ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். இந்நிலையில் கணம் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியானது. டைம் ட்ராவல் ஃபேன்டசி படமாக வெளிவரவுள்ள கணம் படத்தின் விறுவிறுப்பான டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.