“என்னை விட கம்மியான வயசு இளைஞனோடு தான் நான் வாழ்வேன்” என்று அடம் பிடித்த இளம் பெண் ஒருவர், 17 வயது சிறுவனை காதலித்து வந்த நிலையில், தற்போது போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் தாலுகாவில் உள்ள அம்பாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர், தனது தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார்.

அத்துடன், தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, அங்குள்ள அரசு பள்ளியில் பயிற்சி ஆசிரியையாக பயிற்சி பெற்று வந்தார்.

இந்த சூழலில் தான், அந்த பெண் தினமும் பயிற்சிக்கு சென்று வரும் போது, உடையார் பாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனை பார்த்து, அந்த சிறுவனால் இந்த இளம் பெண் ஈர்க்கப்பட்டாகவும் கூறப்படுகிறது.

இதனால், அந்த சிறுவனை இந்த இளம் பெண் விரும்பி காதலித்து வந்திருக்கிறார்.

இந்த 21 வயது இளம் பெண்ணின் காதலை, அந்த 17 வயது சிறுவன் ஏற்றுக்கொண்ட நிலையில், அவர்கள் இருவரும் சேர்ந்து ஜாலியாக அந்த பகுதியில் வலம் வந்ததாகவும் கூறப்படுகிறது.

இப்படியாக, இந்த காதல் ஜோடி, அந்த பகுதியில் ஜோடியாக சேர்ந்து பல நாட்கள் உலா வந்த நிலையில், இந்த காதல் ஜோடிகளின் வியம் அவர்கள் இருவர் வீட்டிற்கும் தெரிய வந்துள்ளது.

இதனால், இருவர் வீட்டிலும் இவர்களுக்கு காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

அத்துடன், அந்த பெண்ணிடம் வயது வித்தியாசத்தை காரணமாக சொல்லி அந்த சிறுவனை மறக்கச் சொல்லி, இளம் பெண்ணின் வீட்டில் வலிறுயுறுத்தி இருக்கிறார்கள்.

ஆனால், தனது பெற்றோரின் அறிவுரையை அந்த இளம் பெண் ஏற்க மறுத்த நிலையில், இருவரும் வழக்கம் போல் ஒன்றாக பல இடங்களுக்கும் சென்று வந்ததாகவும் கூறப்படகிறது.

இந்த நிலையில் தான், அவர்கள் இருவரும், கடந்த மாதம் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகாவில் உள்ள சிறுவனின் உறவினர் வீட்டிற்கு சென்று உள்ளனர். 

அங்கு இருந்த அந்த சிறுவனின் உறவினர்கள், இந்த இருவரின் முறையற்ற வயது வித்தியாசம் பற்றி கேலி பேசி நக்கலாக சிரித்து உள்ளனர். இதனால், அவமானம் அடைந்த காதலர்கள் இருவரும், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளனர்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுவனின் உறவினர்கள், இருவரையும் உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, இருவருக்கும் தீவிரமாக சிகிச்சை அளித்த நிலையில், இருவரும் உடல் நலம் தேறி வீடு திரும்பினர். 

இதனையடுத்து, அந்த 17 வயது சிறுவனின் தந்தை அங்குள்ள காவல் நிலையத்தில் தனது மகனின் காதல் விசயம் குறித்தும், அதனால் அவர்கள் தற்கொலை செய்துகொண்டதும் குறித்தும் புகாராக எழுதி, அந்த 21 வயது இளம் பெண் மீது புகார் அளித்திருக்கிறார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்த புகாரின் பேரில் அந்த 21 வயது இளம் பெண்ணை போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.