வெளிநாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை நோயை இந்தியாவில் தடுப்பதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.

கொரோனா என்னும் கொடியை நோய் உலகம் முழுவதும் பரவி, ஒட்டுமொத்த உலகத்தையும் திருப்பிப் போட்டது. இவற்றுடன் நிற்காமல், இந்த கொரோனா முதல் அலை, 2 ஆம் அலை, 3 ஆம் அலை என்று இந்தியாவில் பரவியது.

அத்துடன், பல வெளிநாடுகளில் இந்த கொரோனா 4 வது அலையையும் கடந்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

முக்கியமாக, கொரோனா பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், இதனால் தம்பதிகள் பலரும் மருத்துவமனைக்கு சென்ற வண்ணம் உள்ளதாகவும் அதிர்ச்சி அளிக்கும் தகவல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அத்துடன், “கொரோனா வைரஸ் தொற்று பீதியால், தம்பதிகள் உடலுறவில் ஈடுபடலாமா?” என்ற சந்தேகமும், அச்சமும் எல்லோரிடத்திலும் அப்போது எழுந்தது.

மேலும், உலகம் முழுவதும் கொரோனா என்னும் பெருந் தொற்று பரவத் தொடங்கிய நேரத்தில், “பாலியல் இன்பத்தில் நேர்மறையான, மரியாதைக்குரிய அணுகுமுறை தேவை” என்று, உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்தது.

அத்துடன், “கொரோனா காலத்தில், தம்பதிகள் முன்னெச்சரிக்கையாக இருக்கும் வகையில் பாதுகாப்பான முறையில், தங்களது துணையுடன் இணைய வேண்டும்” என்று, வெளிநாட்டு மருத்துவர்கள் புதிய புதிய அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிட்டுனர். 

இப்படியான சூழலுக்கு மத்தியில் தான், “பாலியல் உறவால் புதிய நோய் பரவி வருவதாக” அதிர்ச்சி தரும் விசயங்கள் கடந்த மாதம் வெளியாகி, பெரும் பீதியை கிளப்பின.

அதாவது, கடந்த மே மாத தொடங்கிய தருணத்தில், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 10 க்கும் மேற்பட்டோருக்கு “மன்ங்கி பாக்ஸ் வைரஸ்” தொற்று பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

குறிப்பாக, “பாலியல் உறவால் இந்த வைரஸ் அதிகம் பரவ வாய்ப்பு இருப்பதாக” அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறி, அதிர்ச்சிக்கரமான செய்தியை வெளியிட்டு உள்ளனர்.

அத்துடன், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் நாட்டில் 40 க்கும் அதிகமானோருக்கு இந்த “மன்ங்கிபாக்ஸ் வைரஸ்” தொற்று, உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இங்கிலாந்திலும், கனடாவிலும் பரவியது.

இந்த நிலையில் தான், இந்தியாவில் குரங்கு அம்மையை நோயை கட்டுப்படுத்துவது தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு தற்போது வெளியிட்டு உள்ளது. 

இந்தியாவில் இது வரை குரங்கு அம்மை நோய் பாதிக்கவில்லை. என்றாலும், பல வெளி நாடுகளில் இந்நோய் பரவி இருப்பதால், அதை தடுப்பதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் தற்போது வெளியிட்டு உள்ளது. 

அதில், 

- குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது, அதற்கான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் உரிய பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும் என்று, வலியுறுத்தப்பட்டு உள்ளது. 

- நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்றும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

- கண் எரிச்சல், கண் வலி, பார்வை மங்குவது, மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சுவலி உள்ளிட்டவைகள் தென்பட்டால் பொது மக்கள் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 

- குரங்கு அம்மை பாதித்தவர்களையும், மொத்தமாக பாதித்த இடங்களையும் விரைவாக அடையாளம் காண வேண்டும் என்றும், கூறப்பட்டு உள்ளது.

- இந்நோய் மேலும் பரவுவதை தடுக்க சம்பந்தப்பட்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

-  குரங்கு அம்மை பாதித்தவரின் தொடர்பில் இருந்தவர்களை தொற்று அறிகுறி ஏற்பட்டதில் இருந்து, 21 நாட்களுக்கு நாள் தோறும் கண்காணிக்க வேண்டும். 

- நோயாளிகளுக்கும், வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கும் சிகிச்சை அளிக்கும் சுகாதார பணியாளர்கள் நன்றாக கை சுத்தத்தை பராமரிக்க வேண்டும். 

- முழு கவச உடை அணிய வேண்டும் என்றும், கூறப்பட்டு உள்ளது. 

- குரங்கு அம்மை பாதித்த நாடுகளுக்கு சென்று வந்து அறிகுறிகளுடன் காணப்படும் நோயாளிகளை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். 

- மாநில அளவில் அரசுகள் கண்காணிப்பு மையத்தை ஏற்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்றும், மத்திய அரசு மாநில அரசை வலியுறுத்தி உள்ளது.

- மாநிலத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப் பட்டாலும் அது எப்படி பரவியது, நோயால் பாதிக்கப்பட்டவர் எங்கிருந்து வந்தார் என்ற தகவலை உடனடியாக சேகரிக்க வேண்டும் என்றும், வலியுறுத்தப்பட்டு உள்ளது.