“நித்தியானந்தா உயிரோடுதான் இருக்கிறாரா? அல்லது கோமாவில் இருக்கிறாரா?” என்று, பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகவே மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் நித்தியானந்தாவின் பெயர் பெரும்பாலும் உச்சரிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்து, ஆட்சி மாற்றமும் நடந்த நிலையில், பல்வேறு காரணங்களால் நித்தியானந்தாவின் பெயரை தமிழக மக்கள் சற்று மறந்தே போன நிலையில், தற்போது மீண்டும் அவர் பெயரை மீண்டும் உச்சரிக்கத் தொடங்கி உள்ளனர்.

முக்கியமாக, “இந்துக்களுக்காக தனி நாடு ஒன்றை உருவாக்குவதாக” கூறிய நித்தியானந்தா, உலகின் ஏதோ ஒரு இடத்தில் “கைலாசா” என்று, தானே ஒரு பெயரை சூட்டி, தனி நாடு ஒன்றை ஒருவாக்கி, அங்கு நித்தியானந்தா தலைமறைவாக இருந்தபடி, இணையதளங்களில் அவ்வப்போது உலா வருவதுடன், பக்தர்களுக்கு அருள் வழங்குவதாக போதனைகளையும் போதித்து வந்தார்.

ஆனால், சமீப காலமாக அதாவது, “கொரோனா காலத்திற்கு பிறகு, முறையான இந்திய உணவுகள் கிடைக்காமலும், இந்திய உணவுப் பொருட்கள் கிடைக்காமல் போனதாலும், போதிய மருத்துவ வசதிகள் இல்லாததாலும், கைலாசாவில் பஞ்சம் தலை விரித்தாடுவதாகவும்” சமீபத்தில் அங்கிருந்து தப்பித்து வந்த ஒரு சீடர் கூறியிருந்தார். 

இதனை உண்மையாக்கும் விதமாக, எப்போதும் பிரிஷ்காக போட்டோக்கு போஷ் கொடுக்கும் சாமியார் நித்தியானந்தா, உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பது போல், தனது படுக்கையில் உடல் சோர்வுற்ற நிலையில் இருப்பது போன்று ஒரு புகைப்படத்தை கடந்த வாரம் வெளியிட்டிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அதன்படி, அந்த போட்டோவில், “கண்கள் சொறுகி, தனது உடல் எடை குறைந்து மிகவும் மெலிந்த தேகத்திடன் படுக்கையில்” நித்தி படுத்திருக்கிறார். இவற்றுடன், “நான் திரும்ப வருவேனு சொல்லு” என்று, தன் கைபட எழுதி கையெழுத்தை போட்டு உள்ளார். 

அத்துடன், “தனது கையெழுத்தில் கூட எழுத்துப்பிழை ஏற்படும் அளவிற்கு, தன் பெயரை தவறாக எழுதி அதை அடித்து திருத்தி” அவர் எழுதியிருந்தார். இது பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், தற்போது “என்னால் முழுமையாக தூங்க முடியவில்லை என்றும், ஒரு இட்லி கூட சாப்பிட முடியவில்லை” என்றும், நித்யானந்தா சமீபத்தில் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், பதிவிட்டுள்ளது இணையத்தில் பெரும் வைரலானது.

அப்போது, இது தொடர்பாக நித்தியானந்தாவின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ள செய்தியில், “நீங்கள் காஸ்மோஸை ஒரு பெரிய காற்று பலூனாகவும், உங்கள் உடலை ஒரு சிறிய பந்தாகவும் அந்த பெரிய ஏர் பலூனுக்குள் கற்பனை செய்தால், நான் பெரிய ஏர் பலூன். இப்போது நான் பெரிய காற்று பலூனாகவும் உணர்கிறேன்” என்று, குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், “நான், என்னுடைய அடையாளங்கள் பிரபஞ்சத்துடன் நகர்வதை உணர்கிறேன், பிரபஞ்சத்தில் எதையும் நகர்த்த முடியும் என்று உணர்கிறேன். ஆனால், முரண்பாடாக எதையும் நகர்த்த முடியாது. ஆனால், பாரடாக்ஸி காலமாக என் உடலில் எதையும் நகர்த்த முடியாது. முழுமையான தனிமை - 'நான்' என்பதைத் தவிர, வேறு எதுவும் இல்லை” என்றும், அவர் குறிப்பிட்டிருந்த செய்தி, கடந்த வாரம் பெரும் வைரலானது.

குறிப்பாக, கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி திடீரென “நான் சமாதியில் இருக்கிறேன்” என்று, அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். 

அப்போது, “நித்தி இறந்தே விட்டார்” என்றே செய்திகள் வெளியான போதிலும், “திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என்றும், இட்லி கூட சாப்பிட முடியாமல் சமாதியில் இருக்கிறேன்” என்றும், அவர் விளக்கம் அளித்திருந்தார்.

முக்கியமாக, “ஒரு மண்டலம் என்ற கணக்கின் படி கடந்த 48 நாட்களாக சமாதியில் இருப்பதாக” கூறிய நித்தியானந்தா, தற்போது “என்ன ஆனார்? என்ற பேச்சும், தற்போது பரவலாக எழுந்து உள்ளது.

மிக முக்கியமாக, “நித்தி கோமாவிற்கு சென்றுவிட்டார்” என்று, ஒரு பக்கம் செய்திகள் வெளியான நிலையிலும் கூட, இதனை அவரது சிஷ்யைகள் மறுத்து உள்ளனர். 

அதே நேரத்தில் நித்தியின் சிஷ்யைகள் தற்போது விளக்குகளை ஏற்றி வைத்து அவருக்காக சிறப்பு வழிபாடும் நடத்தி வருகின்றனர். இது குறித்த செய்தியானது. தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.