இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் கன்னட சினிமாவின் பக்கம் திருப்பிய பெருமை கேஜிஎப் திரைப்படத்தையே சேரும். முன்னதாக சூப்பர் ஹிட்டான கேஜிஎஃப் 1 படத்தின் இமாலய வெற்றியை தொடரந்து ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு வெளியீடாக கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படம் ரிலீசானது.

இயக்குனர் பிரசாந்த் நில் இயக்கத்தில், வெளிவந்த கேஜிஎப் சாப்டர் 2 திரைப்படம் இந்திய பாக்ஸ் ஆஃபிஸில் 1,235 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அதிரடியான ராக்கி கதாபாத்திரத்தில் நடிகர் யஷ் நடிக்க, ஸ்ரீநிதி செட்டி, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன், ஈஸ்வரி ராவ், அனன்ட் நாக், மாளவிகா அவினாஷ் ஆகியோர் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

HOMBALE பிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்ட படைப்பாக தயாராகி வெளியான கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படத்தை மொழிகளை கடந்து அனைத்து சினிமா ரசிகர்களும் கொண்டாடினர். கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படத்திற்கு புவன் கௌடா ஒளிப்பதிவில், ரவி பஸ்ருர் இசையமைத்துள்ளார்.  

முன்னதாக திரையரங்குகளில் வெற்றிநடை போட்ட கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படத்தின் OTT ரிலீஸுக்காகவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், வருகிற ஜூன் 3ம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படம் வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.