சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட செலிபிரிட்டி ஜோடியான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் பிரம்மாஸ்திரா-பாகம் ஒன்று:சிவா . பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகியிருக்கும் பிரம்மாஸ்திரா திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் தர்மா புரோடக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ள பிரம்மாஸ்திரா-பாகம் ஒன்று:சிவா திரைப்படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் ரிலீசாகவுள்ள பிரம்மாஸ்த்ரா படத்தை வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து ரன்பீர் கபூர், ஆலியா பட் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் பிரம்மாஸ்த்ரா படத்தில் நாகார்ஜுனா, டிம்பிள் கபாடியா, மௌனி ராய், சௌரவ் குஜ்ஜார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, நடிகர் ஷாரூக்கான் முக்கியமான கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். பங்கஜ் குமார் ஒளிப்பதிவில் ப்ரீதம் இசையமைத்துள்ளார்.

பிரம்மாஸ்திரா-பாகம் ஒன்று:சிவா படம் வருகிற செப்டம்பர் 9ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில்  பிரம்மாஸ்திரா-பாகம் ஒன்று:சிவா திரைப்படத்தின் ட்ரைலர் வருகிற ஜூலை 15ஆம் தேதி வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் திரைப்படத்தின் புதிய GLIMPSE வீடியோ தற்போது வெளியானது. அந்த GLIMPSE வீடியோ இதோ…