மனைவி ஒருவர், தனது கணவனுடன் நெருக்கமாக பழகி வந்த அவரது தோழியான இளம் பெண்ணை வீட்டிற்கு வரவழைத்து, 4 இளைஞர்களை ஏவிவிட்டு கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ய வைத்த சம்பவம், கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் என்பவர், ஐதராபாத்தை சேர்ந்த காயத்ரி என்ற பெண்ணுடன் திருமணமாகி தெலங்கானா மாநிலம் கொண்டாப்பூரில் உள்ள ஸ்ரீராம் நகர் பகுதியில் வசித்து வருகிறார்.

அத்துடன், கணவன் ஸ்ரீகாந்த், அந்த பகுதியில் சிவில் தேர்வுக்கான பயிற்சி எடுத்து வருகிறார். 

அதே நேரத்தில், ஸ்ரீகாந்துடன் பயிற்சி பெற்று வந்த அங்குள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் ஒருவருடன், அவருக்கு பழக்கம் ஏற்பட்டு அவர் குடும்ப தோழியாக மாறினார். 

இப்படியான நிலையில் தான், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அந்த இளம் பெண்யை,  ஸ்ரீகாந்தின் மனைவி காயத்ரி, தனது வீட்டுக்கு அழைத்து உள்ளார். 

அந்த பெண்ணும், ஸ்ரீகாந்த் வீட்டிற்கு வந்து உள்ளார். அப்போது, “சிவில் பயிற்சி முடியும் வரை, தன் வீட்டிலேயே தங்கி பயிற்சி பெறும் படி”  ஸ்ரீகாந்தின் மனைவி காயத்திரி கூறியிருக்கிறார். 

இதனையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் முதல் வீட்டில் தங்கி அந்த இளம் பெண் படித்து வந்தார்.

அப்போது, ஸ்ரீகாந்த் மனைவி காயத்ரியின் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், அவரது கணவரை அந்த இளம் பெண் உடன் இருந்து கவனித்து கொண்டிருக்கிறார். இதனால், ஸ்ரீகாந்துக்கும் அந்த இளம் பெண்ணுக்குமான நட்பு மேலும் அதிகரித்து உள்ளது.

அத்துடன், இருவரும் இருவரும் மிக நெருக்கமாக பழக ஆரம்பத்ததாகவும் கூறப்படுகிறது. 

இப்படியாக, அவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள நெருக்கத்தைப் பார்த்தா ஸ்ரீகாந்தின் மனைவி காயத்ரி, “தமது கணவனுடன் அந்த இளம் பெண்ணுக்கு கள்ளக் காதல் இருக்குமோ?” என்று, சந்தேகம் அடைந்திருக்கிறார்.

அத்துடன், இதனை உறுதி செய்யும் விதமாக, இது தொடர்பாக காயத்ரி, பல முயற்சிகளையும் எடுத்திருக்கிறார். 

ஒரு கட்டத்தில் அந்த இளம் பெண் மீது காயத்திரிக்கு சந்தேகம் முற்றிய நிலையில், அந்தப் பெண்ணை கொடூரமாக பழி வாங்க அவர் திட்டமிட்டிருக்கிறார். 

இதனையடுத்து, தன் கணவருடன் பழகிய அந்த இளம் பெண்ணுக்கு போன் செய்த காயத்ரி, தனது வீட்டுக்கு வருமாறு அழைத்திருக்கிறார். அதனை நம்பிய அந்தப் பெண், காயத்ரியின் வீட்டுக்கு வந்திருக்கிறார்.

அப்போது, ஸ்ரீகாந்தின் மனைவி காயத்ரி, தனது வீட்டில் முன் கூட்டியே 4 இளைஞர்களை ஏற்பாடு செய்து அழைத்து வந்திருக்கிறார்.

அந்த நேரத்தில், தனது வீட்டிற்கு வந்த அந்த இளம் பெண்ணை, அங்குள்ள ஒரு ரூமில் அடைத்து வைத்து, அங்குள்ள ஒரு கட்டிலில் கட்டி வைத்து உள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, அந்த 4 இளைஞர்களும் அந்த இளம் பெண்ணை மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

ஆனால், தற்போது தான் இந்த கொடூர சம்பவம் வெளியே தெரிய வந்திருக்கிறது.

குறிப்பாக, அந்த இளம் பெண்ணை பலாத்காரம் செய்த அந்த 4 இளைஞர்களும், அந்த பெண்ணை பலாத்காரம் செய்யும்போது வீடியோ எடுத்து உள்ளனர்.

அந்த வீடியோவை வைத்து ஸ்ரீகாந்தின் மனைவி காயத்ரி, அந்தப் பெண்ணை தொடர்ந்து பிளாக் மெயில் செய்து வந்திருக்கிறார். 

இதனால், பயந்து பயந்து காயத்ரி சொல்படி கேட்டு நடந்த அந்த பெண், கடும் சித்திரவதைகளை தாங்க முடியாமல் தற்போது அந்த இளம் பெண், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இது தொடர்பாக, ஸ்ரீகாந்தின் மனைவி காயத்ரி உள்ளிட்ட 5 பேரும் அதிரடியாக கைது செய்து, போலீசார் அவர்களை சிறையில் அடைத்து உள்ளனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.