உலக நாயகனின் தீவிர ரசிகரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்திருக்கும் திரைப்படம் விக்ரம். ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியிருக்கும் விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

அன்பறிவு மாஸ்டர்ஸ் ஸ்டன்ட் இயக்கத்தில் பக்காவான அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக தயாராகி இருக்கும் விக்ரம் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் முன்னணி வேடங்களில் நடிக்க, நரேன், அர்ஜுன் தாஸ், சேம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, சம்பத்ராம், ஹரிஷ் பெறடி, ஆண்டனி வர்கீஸ், சிவானி, மகேஸ்வரி, மைனா, நந்தினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

விக்ரம் திரைப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். அனிருத் இசையில் அனைத்து பாடல்களும்  ட்ரெண்டாகி வருகின்றன. ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடும் விக்ரம் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து திரைப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது விக்ரம் திரைப்படத்திலிருந்து புதிய மேக்கிங் வீடியோ வெளியானது. The Story Of Our Director என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் குறிப்பிட்டு இந்த வீடியோவை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. வைரலாகும் அந்த வீடியோ இதோ…