விக்ரம் படக்குழுவினர் கொடுத்த சர்ப்ரைஸ் அப்டேட் இதோ!
By Anand S | Galatta | May 31, 2022 20:14 PM IST

60 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஈடு இணையற்ற நடிகராகவும் கலைஞானியாகவும் திகழும் கமல் ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள விக்ரம் திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
உலகநாயகனின் தீவிர ரசிகரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் படமாக தயாராகி இருக்கும் விக்ரம் திரைப்படத்திற்கு அன்பறிவு மாஸ்டர்ஸ் ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ள விக்ரம் படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசை அமைத்துள்ளார்.
உலக நாயகனுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி & ஃபகத் பாசில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் விக்ரம் திரைப்படத்தின் மிரட்டலான ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அனிருத் இசையில் பாடல்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரிலீசுக்கு இன்னும் ஓரிரு நாட்களே இருக்கும் நிலையில், விக்ரம் திரைப்படத்தின் இறுதிகட்ட மிக்ஸிங் பணிகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு முற்றிலும் தயாராகிவிட்டதாக தற்போது படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இருவரும் உலகநாயகன் கமலஹாசன் என டைட்டில் கார்ட் இருக்கும் திரைக்கு முன்பாக கைகோர்த்தபடி நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதனை அறிவித்துள்ளார். ட்ரெண்டாகும் அந்த புகைப்படம் இதோ…
Locked & Loaded 🔥#VikramFromJune3 pic.twitter.com/1G5LAU09if
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) May 31, 2022