குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் இருக்கும் ஷூல்பனேஷ்வர் வனவிலங்கு சரணாலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை ‘சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம்’ என்று அறிவிக்கும் MoEFCC-ன் அறிவிப்பைத் திரும்பப் பெறுமாறு பழங்குடி மக்கள் போராட்டி வருகிறார்கள். இதுதொடர்பாக விவசாயிகள் மற்றும் உள்ளூர் மக்களின் நலன்கருதி கடந்த வாரம் பருச் மக்களவை தொகுதி எம்பி மன்சுக் வாசவா பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். மேலும், ‘’ பட்ஜெட் அமர்வு கூட்டத்தின்போது சபாநாயகரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிடுகிறேன்” என்று தெரிவித்திருந்தார். 


அடுத்த ஒருநாளிலே, “எனக்கு அரசுடனும், கட்சியுடனும் எந்த சிக்கலும் இல்லை. எனது உடல் நிலையினாலேயே நான் விலக நினைத்தேன். நான் மக்களவை உறுப்பினராக தொடர வேண்டும் என கட்சியினர் அன்போடு சொன்னதால் எனது ராஜினாமா முடிவை பின்வாங்கி கொள்கிறேன்” என தெரிவித்து இருக்கிறார்.  மத்திய குஜராத்தில் உள்ள இந்த பருச் மக்களவை தொகுதியில், ஆறுமுறை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.பியின் இந்த செயல் குஜராத்த அரசியல் வட்டாரத்தில் கலாய்த்து வருகிறார்கள்.