கடந்த ஜூன் மாதம் லடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே  ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த சுமார் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர் மற்றும் சுமார் 76-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயம் அடைந்தனர். இதன்பின் ,இருநாடுகளுக்கும் இடையே போர்ச் சூழலை ஆரம்பமானது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வை காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது. 


“ இந்தியா சீனாவுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடந்தது. வீரர்களை பின் வாங்கி கொள்வதற்கான இந்த பேச்சுவார்த்தையையில் எந்தவித முன்னேற்றமும் எட்டப்படவில்லை.   ஆனால் எந்த தீர்வும் கிடைக்கப்பெறவில்லை. இருநாட்டு ராணுவ உயர்மட்ட அதிகாரிகளுக்கு இடையிலான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை எந்நேரமும் நடைபெறலாம் ” என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.