திரையரங்கை துவம்சம் செய்த முன்னணி நடிகரின் ரசிகர்கள்...வைரல் வீடியோ !
By Aravind Selvam | Galatta | December 18, 2021 19:31 PM IST
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன்.இயக்குனர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் இவர் ஹீரோவாக Ala Vaikunthapuramulo என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் 2020 பொங்கலையொட்டி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.பட்டி தொட்டி எங்கும் இந்த படம் வசூல் மழை ஈட்டியது.
இதனை அடுத்து அல்லு அர்ஜுன் அல்லு அர்ஜுன் 21,புஷ்பா 2 உள்ளிட்ட படங்களில் நடிக்கவுள்ளார்.இவர் நடிக்கும் 21ஆவது படத்தை மிர்ச்சி,பரத் அன்னே நேனு உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய கொரட்டால சிவா இயக்குகிறார்.இந்த படம் 2022 தொடக்கத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அல்லு அர்ஜுன் ரங்கஸ்தலம் பட இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் தயாராகி வரும் புஷ்பா படத்தில் நடித்துள்ளார்.ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.ஃபஹத் பாசில் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் முதல் பாகம் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.திருப்பதியில் இந்த படம் வெளியாகியிருக்கும் ஒரு திரையரங்கில் படத்தின் சத்தம் போதியளவு இல்லை என்ற ஆத்திரத்தில் ரசிகர்கள் நாற்காலியை எடுத்து ஆப்பரேட்டர் ரூமில் எறிந்துள்ளனர்.அத்தோடு அங்கிருந்த ப்ரொஜெக்டர் உள்ளிட்ட சில கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Allu arjun fans destroying projector in #palani theater #tirupati @alluarjun #PushpaReleasePressMeet #PushpaRaj #pushpa #PushpaTheRiseOnDec17th @PushpaMovie pic.twitter.com/v0F9Iqqpw7
— United Tirupati (@TirupatiUnited) December 17, 2021
Pa. Ranjith's next after Sarpatta Parambarai - Official shooting update!
18/12/2021 07:00 PM
BREAKING: Udhayanidhi Stalin's Nenjuku Needhi - Boney Kapoor's new announcement!
18/12/2021 06:50 PM