அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், தான் பதவியேற்ற முதல் நாளிலேயே அதிரடியாக பல உத்தரவுகளுக்கு கையெழுத்திட்டுள்ளார். அவை, 


ஈரான், ஈராக், லிபியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வர விதிக்கப்பட்டிருந்த தடையை  நீக்கி, விசா வழங்கும் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளார்.


சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு இயங்குவதாக, முன்னாள் அதிபர் டிரம்ப் அறிவித்த கட்டுப்பாடுகளை தளர்த்தி, நல்லிணக்கம் ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளார்.


அமெரிக்காவில் நிலவும் வேலையின்மையை நீக்க 1.9 ட்ரில்லியன் டாலர் மதிப்பீட்டில் திட்டங்கள் தொடங்கப்படும் என அறிவித்துள்ளார். 


கொரோனா பரவலை கட்டுப்படுத்த, பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கி உள்ளார்.


2015 பாரிஸ் பருவ நிலை மாற்ற ஒப்பந்தம் மீண்டும் தொடர அனுமதி வழங்கியுள்ளார்.
அமெரிக்கா- மெக்சிகோ இடையிலான எல்லைச்சுவர் கட்டுமானப்பணிகளை நிறுத்த உத்தரவிட்டுள்ளார். 


பணி நிமித்தமாக அமெரிக்காவில் தங்கியுள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு க்ரீன் கார்டு வழங்கும் திட்டம் தொடங்கியுள்ளார். 


பாலினம், நிறவெறிக்கு எதிரான புதிய சட்டத்திருத்தங்கள் மற்றும் சட்ட விரோதமாக வெளி நாட்டிலிருந்து வருபவர்களின் குழந்தைகளுக்கு அதிகப்படியான பாதுக்காப்பு உள்ளிட்ட பல வரவேற்கதக்க  ஆணைகளை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவுகளுக்கு உலகமெங்கும் பல லைக்ஸ்கள் குவிந்து வருகிறது