அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் இன்று பதவியேற்றக உள்ளார். ஆட்சி அமைய இருக்கும் அரசவை பொறுப்புகளுக்கு தலைவர்களை, நிர்வாகிகளை தேர்வு செய்ய பணி நிறைவடைந்து உள்ளது. முன்னதாக முக்கிய பொறுப்பில் இரண்டு இந்திய வம்சாவளி பெண்களை பணியமர்த்தினார்.


அமெரிக்க வெள்ளை மாளிகையில் இந்திய பெண்களுக்கு முக்கிய பதவிகள் கொடுக்கப்பட்டது,  இது இந்தியர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் திருநங்கை ஒருவருக்கு பதவி கொடுத்திருப்பது உலகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. 


சுகாதாரத்துறை துணை செயலாளராக டாக்டர் ரேச்சல் லெவின் என்ற திருநங்கை நியமிக்கப்பட்டு உள்ளார்.  அமெரிக்க அரசுத்துறையின் உயர் பொறுப்பு வகிக்கும் முதல் திருநங்கை என்ற வரலாற்று பெருமையை டாக்டர் லெவின் பெற்றுள்ளார். இதற்கு முன்  பென்சில்வேனியா சுகாதார செயலாளராகவும், மாநில மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் மருத்துவம் மற்றும் மனநல பேராசிரியராகவும் பணியாற்றினார்.


அமெரிக்க நிர்வாகத்தின் சுகாதராத்தை வழிநடத்த சரியான தேர்வு லெனின். இதுபோன்ற பதவிகளுக்கு இனம், மதம், பாலின அடையாளம், உடற்திறன் குறைபாடு ஆகியவை முக்கியமல்ல என்று பைடன் தனது அறிக்கையில் கூறி உள்ளார்.