56 வயது மகள் சாட்சியாக 80 வயது முதியவர் ஒருவர், 29 வயது இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

“காதலுக்குக் கண்ணில்லை என்பது சரிதான் போல!”

“காதல், 6 லும் வரும், 60 திலும் வரும்” என்பது, இங்கே தற்போது நிரூபணமாகி உள்ளது. அப்படியான ஒரு விசித்திரமான காதல் கதை தான், தென் ஆப்பிரிக்காவில் அரங்கேறி இருக்கிறது. 

தென் ஆப்பிரிக்கா நாட்டின் கேப்டவுன் நகரைச் சேர்ந்த 29 வயது இளம் பெண் டெர்செல் ராஸ்மஸ் என்பவர், அந்நாட்டில் சட்டம் படித்து வரும் மாணவியாக இருந்து வருகிறார். 

இந்த இளம் பெண் தான், தன்னை விட 51 வயது மூத்த வயது கொண்ட சரியாக 80 வயது கொண்ட வில்சன் என்ற முதியவரைக் காதலித்து, பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு உள்ளார்.

இந்த வித்தியாசமான காதல் திருமணம் குறித்துப் பேசிய டெர்செல் ராஸ்மஸ், தங்களுக்குள் எப்படி காதல் வந்து எட்டிப்பார்த்தது என்பது பற்றியும் அவர் விவரித்து உள்ளார்.

அதாவது, “ கடந்த 2016 ஆம் ஆண்டு 80 வயது முதியவரான வில்சனை, அவர் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் டெர்செல் ராஸ்மஸ் பார்த்திருக்கிறார். 

“வில்சன் தான், என்னை முதலில் பார்த்தார் என்றும், பார்த்ததுமே என் அருகில் வந்து எனது பக்கத்தில், 'இங்கு நான் அமரலாமா?' என்று கேட்டார்” என்றும், குறிப்பிட்டு உள்ளார்.

அத்துடன், “அவரை நான் அப்போது தான் முதல் முதலாகப் பார்த்தேன் என்றும், பார்த்த அந்த நிமிடமே எங்களுக்குள் ஒரு வித ஈர்ப்பு ஏற்பட்டது” என்றும், கூறியுள்ளார். 

“அதன் பிறகு, வெகு நேரமாக நாங்கள் இருவரும் பேசிக் கொண்டு இருந்தோம் என்றும், எங்களுக்கு பிரியவே மனம் இல்லை என்றும், ஆனால் மனசே இல்லாமல் நாங்கள் இருவரும் அப்போது அங்கிருந்து பிரிந்து சென்றோம் என்றும், அதன் பிறகு இருவரும் சந்தித்துக் கொள்ள முடிவு செய்து எங்களின் செல்போன் எண்களை நாங்கள் பரிமாறிக்கொண்டோம்” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார். 

“இப்படியாக, ஒரு நாள் டேட்டிங் செல்ல நாங்கள் முடிவு செய்து, இருவரும் வெளியில் சென்றோம். அங்கு, இருவருக்குள்ளும் நல்ல ஒரு புரிதல் இருப்பது எங்களுக்குத் தெரிந்தது. இதனையடுத்து, கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம்” என்றும், அவர் தெரிவித்து உள்ளார்.

அதே நேரத்தில், “எங்கள் இருவரின் திருமணத்திற்கு எனது பெற்றோர் முழு மனதுடன் சம்மதம் தெரிவித்தனர்” என்றும், 29 வயதான இளம் பெண் டெர்செல் ராஸ்மஸ், மகிழ்ச்சி பொங்கக் கூறுகிறார்.

“அதன் தொடர்ச்சியாகத் தான், வில்சனுடைய 51 வயது மகளைச் சாட்சியாக வைத்து நாங்கள் முறைப்படி திருமணம் செய்து கொண்டோம் என்றும், நாங்கள் இருவரும் தற்போது வரை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம்” என்றும், 29 வயதான இளம் பெண் டெர்செல் ராஸ்மஸ் தெரிவிக்கிறார்.

“ஆனால், நாங்கள் இருவரும் ஜோடியாக வெளியே சென்றால், எங்களைப் பலரும் தந்தை - மகள் என்று கூறுகின்றனர் என்றும், ஆனால் அது பற்றி எங்களுக்குக் கவலை இல்லை” என்றும், அந்த 29 வயதான இளம் பெண் டெர்செல் ராஸ்மஸ் குறிப்பிடுகிறார். 

குறிப்பாக, “வில்சனை பார்த்ததும், அவர் என்னை வாழ் நாள் முழுவதும் நன்றாகக் கவனித்துக் கொள்வார் என்று எனக்குத் தோன்றியது என்றும், அந்த ஒரு நொடியில் இவர் தான் என்னுடைய வருங்கால கணவர் என்பதை நான் அப்போதே முடிவு செய்தேன்” என்றும், 29 வயதான இளம் பெண் டெர்செல் ராஸ்மஸ், மகிழ்ச்சி பொங்கப் பேசுகிறார். இந்த திருமண நிகழ்வு தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.