தமிழ் திரையுலகில் ஏராளமான ரசிகர்களின் அபிமானம் பெற்ற நடிகர் ராகவா லாரன்ஸ். ராகவா லாரன்ஸ் - பைவ் ஸ்டார் கதிரேசன் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ருத்ரன். இதன் போஸ்டர் ஒன்றையும் சமீபத்தில் வெளியிட்டது படக்குழு. இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிகிறார். 

ஆடுகளம், ஜிகர்தண்டா உள்ளிட்ட பல வரவேற்பைப் பெற்ற படங்களை அவர் தயாரித்திருந்தாலும், இதுவரை இயக்குனராகப் பணிபுரிந்ததில்லை. தற்போது ருத்ரன் படத்தைத் தயாரித்து, இயக்கி வருகிறார் கதிரேசன். இந்த படத்தில் சரத்குமார் இணைந்த செய்தி கடந்த வாரம் வெளியானது. 

ஏற்கனவே காஞ்சனா படத்தில் ராகவா லாரன்ஸ் சரத்குமார் ஆகிய இருவரும் இணைந்து நடித்த நிலையில் தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு இருவரும் இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எடிட்டர் ஆண்டனி ருத்ரன் படத்தில் இணைந்துள்ளார். இவர் கடைசியாக காப்பான், புத்தம் புது காலை ஆந்தாலஜி போன்ற படங்களில் பணியாற்றினார். 

இந்தியில் வெளியான லக்ஷ்மி படத்தைத் தொடர்ந்து, தமிழில் கவனம் செலுத்தி வருகிறார் லாரன்ஸ். அடுத்து இயக்கவுள்ள படத்துக்கான கதை விவாதம் நடைபெற்று வரும் சமயத்தில், நடிக்கவுள்ள படத்தின் பணிகளையும் லாரன்ஸ் கவனித்து வருகிறார்.  பி.வாசு இயக்கத்தில் உருவாகும் சந்திரமுகி 2 படத்திலும், பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் லாரன்ஸ்.