பிக் பாஸ் வீட்டில் ஷிவானி நாராயணன் உடன் நெருங்கி பழகி வந்த பாலாஜி முருகதாஸ், தங்களுக்குள் இருந்தது அன்பு மட்டும் தான் காதல் இல்லை என்பதை விளக்கி இருந்தார். பாலாஜி முருகதாஸ் கையில் ஒரு பெண்ணின் பெயரும் பச்சைக் குத்தப்பட்டு இருக்கும் நிலையில், இப்படியொரு ட்வீட்டை அவர் போட்டுள்ளது ஆச்சர்யத்தை கொடுக்கிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 4-ன் காதல் மன்னனாக பாலாஜி முருகதாஸ் மட்டுமே வலம் வந்தார். ஷிவானி நாராயணன், கேபி, சுசித்ரா மற்றும் சனம் ஷெட்டி என பல பெண்கள் பாலாவின் பின்னால் சுற்றிய பல தருணங்களும், காதல் பிஜிஎம்முடன் ஏகப்பட்ட புரமோக்களும் பாலாவுக்கே போடப்பட்டதை யாரும் மறுக்க முடியாது.

பிக் பாஸ் போட்டியாளரான பாலாஜி முருகதாஸுக்கு ஏகப்பட்ட இளம் பெண்கள் ரசிகைகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது. மிஸ்டர் இன்டர்நேஷனலான பாலாஜி ஆரம்பத்தில் பல முறை தனது பேர் பாடியை காட்டியும் என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன் என்பது போல இருந்தும் ரசிகைகளை வெகுவாக ஈர்த்தார்.

பிக் பாஸ் வீட்டில் ஷிவானியுடன் ஓவர் நெருக்கமாக பழகி வந்தார் பாலாஜி முருகதாஸ். பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரம் வரை இருவரும் அந்த வீட்டில் டேட்டிங் செய்வது போல, ஊட்டி விட்டுக் கொண்டும், ஒன்றாக படுக்கையில் படுத்துக் கொண்டும், ஒன்றாகவே சுற்றிக் கொண்டும் இருந்ததை ஷிவானியின் அம்மாவே கண்டித்தார்.

பாலாவின் கையில் இருக்கும் டாட்டூவில் இருக்கும் அந்த பெயரை காட்ட சொல்லி அர்ச்சனா அக்கா கால் சென்டர் டாஸ்க்கிலேயே பாலாவின் பாஸ்ட் லவ்வை பற்றி ஓப்பன் பண்ணி விட்டதும் நிகழ்ச்சியில் பரபரப்பை கிளப்பியது. இதுவரை அந்த டாட்டூவில் யார் பெயர் உள்ளது என பாலா சொல்லவே இல்லை.

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் பாலாஜி முருகதாஸ், வரும் பிப்ரவரி 14ம் தேதி எல்லாருக்கும் காதலர் தினம், ஆனால், நமக்கு மட்டும் முரட்டு சிங்கிள் டே என போட்டுள்ள ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது. அவரது ட்வீட்டுக்கு கீழே ஏகப்பட்ட சூப்பரான கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

முரட்டு சிங்கிள் என பாலாஜி முருகதாஸ் பதிவு செய்துள்ள நிலையில், சிங்கிள் தானே? அப்போ மிங்கிள் ஆகலாமா என பாலாவின் பரம ரசிகை ஒருவர் கமெண்ட் செய்தததை பார்த்த பாலா, அஸ்க்கு புஸ்க்கு என அதற்கு செம உஷாராக பதிலும் அளித்துள்ளார்.