“மிரட்டியதால் ஆபாசப் படத்தில் நடித்தேன்” என்று, மாடல் அழகி ஒருவர் கதறி புகார் அளித்த நிலையில், இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டு 
உள்ளனர். 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்ற 29 வயது மாடல் அழகி ஒருவர், மும்பையில் தங்கிப் பட வாய்ப்புக்களைத் தேடி வந்தார். அப்போது, அந்த மாடல் அழகிக்கு ஒரு பெண் அறிமுகம் ஆகி உள்ளார். 

இதனையடுத்து, புதிதாக அறிமுகம் ஆன அந்த பெண், “ஓடிடி இணைய தளத்தில் நடிக்க வைப்பதாக அந்த அழகியை நம்ப வைத்திருக்கிறார். இதனையடுத்து, அந்த பெண்ணிடம் ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்தும் பெற்றுக்கொண்டு உள்ளனர். அதன் தொடர்ச்சியாக, அந்த அழகியை மிரட்டியே, ஆபாச படத்தில் நடிக்க வைத்து உள்ளனர் என்று தெரிகிறது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த மாடல் அழகி, கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட அந்த மாடல் அழகி, மும்பை போலீசாரிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரில், “மும்பைச் சேர்ந்த யாஷ்மின் கான் என்ற பெண், எனக்கு அறிமுகம் ஆகி, என்னை ஓடிடி இணைய தளத்தில் நடிக்க என்னிடம் ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து பெற்றார்” என்று குறிப்பிட்டு உள்ளார். 

அதன் பிறகு, “அவர் என்னை சக நடிகர்களுடன் ஆபாச காட்சிகளில் நடிக்குமாறு என்னை ரொம்பவும் கட்டாயப்படுத்தினார் என்றும், இதற்கு முடியாது என்று நான் மறுத்த போது, போலீசில் புகார் அளிப்பேன் என்றும், என்னை மிகவும் மோசமாக முறையில் பயமுறுத்தி மிரட்டினார்” என்றும், குறிப்பிட்டு உள்ளார்.

இதையடுத்து, “கடந்த டிசம்பர் மாதம் ஒரு அடுக்குமாடி கட்டடத்தில் வைத்து என்னை ஆபாச காட்சியில் அந்த பெண் உட்பட அவரது குழுவினர் என்னை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தனர்” என்றும், தெரிவித்து உள்ளார். 

“இதனால், நான் கடும் மன வேதனை அடைந்தேன் என்றும், இதன் காரணமாக இந்த சம்பவத்தில் தொடர்புடைய யாஷ்மின் கான் உள்ளிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், அந்த புகாரில், பாதிக்கப்பட்ட அந்த மாடல் அழகி வலியுறுத்தி இருந்தார். 

மாடல் அழகி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில், சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடுபவர்களைக் குறிவைத்து, ஆபாசப் படங்களில் நடிக்க சொல்லி கட்டாயப்படுத்தியது தொடர்பாக இது வரை 9 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர். 

சமீபத்தில் கூட இதே மும்மையில் இதே போன்ற ஒரு சம்பவம் நிகழ இருந்ததை போலீசார் சமீபத்தில் முறியடித்தனர். ஆனால், அதன் தொடர்ச்சியாக “என்னை மிரட்டி ஆபாசப் படத்தில் நடிக்க வைத்ததாக மாடல் அழகி ஒருவர் போலீசில் புகார்” அளித்துள்ள சம்பவம் இருப்பது மும்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.