12 ஆம் வகுப்பு மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய இளைஞர், திருமணம் செய்வதாகக் கூறி விட்டு தற்போது தலைமறைவாகி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மங்காடு பகுதியைச் சேர்ந்த 16 வயதான சிறுமி ஒருவர், அங்குள்ள அரசுப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அடுத்து உள்ள எஸ்.டி.மங்காடு பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் என்பவரது மகன் 30 வயதான சதீஷ், அந்த பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார். 

அதே போல், இவரது எதிர் வீட்டில் 16 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அந்த சிறுமி, மங்காடு பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில்  12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இப்படியான சூழ்நிலையில், தினம் பள்ளிக்கு சென்று வரும் மாணவியை சதீஷ், தனது காதல் வலையில் வீழ்த்தி உள்ளார். இதனால், பள்ளிக்குச் சென்று வந்த 12 ஆம் வகுப்பு மாணவி, சதீஷ் உடன் பழகி அவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இப்படியாக, ஒருவரை ஒருவர் விரும்பி காதலித்து வந்து உள்ளனர்.

இப்படியாக, இவர்களது காதல் சென்றுகொண்டிருந்த நிலையில், 16 வயது பள்ளி மாணவியிடம் காதலன் சதீஷ் ஆசை ஆசையான வார்த்தைகளை அள்ளி 
வீசியிருக்கிறார். ஒரு கட்டத்தில் சதீஷ் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி, காதலன் சொல்வதையெல்லாம் அந்த மாணவி செய்து வந்திருக்கிறார். 

இந்த நிலையில், காதலன் சதீஷ் அந்த மாணவியை கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி தனது வீட்டின் மாடிக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்வதாக மேலும் சில ஆசை வார்த்தைகளைக் கூறி, அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இப்படியாக, அந்த 16 வயது மாணவியை அவன் பல முறை தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளான்.

இப்படியான சூழ்நிலையில், மாணவிக்குத் தனது உடலில் சில மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளன. இதனைப் பற்றி தனது காதலனிடம் கூறிய அந்த மாணவி, “என்னை திருமணம் செய்துகொள்” என்று, கூற இருக்கிறார்.

இதனையடுத்து, காதலன் சதீஷ், அந்த மாணவியை சந்திப்பதை முற்றிலுமாக தவிர்த்து வந்திருக்கிறார். இவற்றுடன், காதலியான அந்த மாணவியை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றும் அவன் கூறி வந்திருக்கிறான்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, அங்குள்ள குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் தன்னை ஏமாற்றிய காதலன் மீது புகார் அளித்தார். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சதீஷை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் இந்த விசாரணையில், மாணவியை ஆசை 
வலையில் வீழ்த்தி பாலியல் பலாத்காரம் செய்ததை அவன் ஒப்புக்கொண்டான்.

இதனையடுத்து, பலாத்காரம் செய்த அந்த மாணவிக்கு 18 வயது ஆனதும் திருமணம் செய்துகொள்கிறேன் என்று, உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு ஏதும் பதிவு செய்யாமல், இருவரையும் சமாதானமாகச் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், காதலன் சதீஷ் கூறிய பேச்சை நம்பி, சம்மந்தப்பட்ட மாணவியின் உறவினர்கள் கடந்த டிசம்பர் மாதம் சதீஷ் வீட்டுக்கு கல்யாண பேச்சு வார்த்தை நடத்த சென்று உள்ளனர். 

அப்போது, சதீஷ் மற்றும் அவரது உறவினர்கள் மாணவியின் உறவினர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மாணவி மற்றும் மாணவியின் உறவினர்கள் சதீஷின் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த குளச்சல் மகளிர் போலீசார், மாணவியிடம் பேச்சு வார்த்தை நடத்தி சதீஷ் அவரது தாயாரான 70 வயதான சுந்தரி மற்றும் அவரது சகோதரர் 38 வயதான ரதீஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். 

இந்த தகவலைக் கேள்விப்பட்ட சதீஷ், தன்னையும் போலீசார் கைது செய்து விடுவார்கள் என்று பயந்து, தற்போது தலைமறைவாகி உள்ளார். இதனையடுத்து, தலைமறைவாகி இருந்த சதீஷை பிடிக்க போலீசார் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில், 2 மாதங்கள் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், தற்போது காதலன் சதீஷை போலீசார் அதிரடியாகக் கைது செய்து, குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், நீதிமன்றம் உத்தரவுப் படி, சதீஷை போலீசார் சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.