வேலூரில் கல்லூரிக்கு வந்த மாணவியை, அங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவரே சினிமா பாணியில் மயக்க ஸ்பிரே அடித்து, அந்த மாணவியை ஆசைதீர பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கொரோனா காலத்தில் பலரும் சமூக இடைவெளியைப் பின்பற்றுவது இல்லை என்பது, சமூகத்தில் நிகழும் இது போன்ற பாலியல் பலாத்கார சம்பவங்கள் மூலம் தெளிவாகத் தெரிகிறது.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த 16 வயதான இளம் பெண் ஒருவர், கே.வி.குப்பம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

தற்போது கொரோனா ஊரடங்கு காலமாக, பள்ளி மற்றும் கல்லூரிகள் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால், மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வகுப்பில் பாடம் படித்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த மார்ச் மாதம் 28 ஆம் தேதி, அந்த மாணவியின் தந்தை பயன்படுத்தும் செல்போனுக்கு கல்லூரியின் ஊழியர் ஒருவர் போன் செய்து, “உங்கள் பெண்ணின் ரெக்கார்ட் நோட்டை நாளை கல்லூரிக்கு கொண்டு வரச் சொல்லுங்கள்” என்று கூறி உள்ளார்.

அந்த பெண்ணின் தந்தையும், தன் மகளிடம் இது பற்றி கூற, அடுத்த நாளே அந்த பெண் தன்னுடைய ரெக்கார்ட் நோட்டுடன் தான் படிக்கும் கல்லூரிக்குச் சென்று உள்ளார்.

அப்போது, கல்லூரி மூடி இருந்த நிலையில், கல்லூரி அருகே ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில், அந்த பெண் நடந்து வரும்போது, அந்த கல்லூரியின் ஊழியர் பிரதாப், அந்த மாணவியிடம் பேச்சு கொடுப்பது போல் கிட்டே வந்து, அந்த பெண்ணின் முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்து உள்ளார்.

இதில், அந்த இளம் பெண் அங்கேயே மயங்கி சரிந்து உள்ளார். இதனையடுத்து, அந்த பெண்ணை கல்லூரிக்குத் தூக்கிச் சென்ற அந்த நபர், அங்குள்ள ஒரு அறையில் வைத்து அந்த இளம் பெண்ணை மயக்க நிலையிலேயே வைத்து ஆசைதீர பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

பாலியல் பலாத்கார இச்சைகள் எல்லாம் அந்த நபரிடம் தீர்ந்து முடிந்த அடுத்த சில நிமிடங்களில் அந்த இளம் பெண் கண் விழித்துப் பார்த்து உள்ளார். 

அப்போது, அந்த பெண் தன் உடலில் ஆடைகள் இன்றி, அங்குள்ள ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்து உள்ளார். அந்த பெண்ணின் அருகில் அந்த கல்லூரியின் பணிபுரியும் பிரதாப் என்பவரும் அமர்ந்து இருந்துள்ளார்.
 
தன் உடலின் நிலை குறித்தும், தனக்கு நேர்ந்த பாலியல் பலாத்காரம் குறித்தும் உணர்ந்த அந்த பெண், கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து, அந்த பெண் பிரதாபிடம் சண்டைக்குச் சென்றுள்ளார். ஆனால், பிரதாப்போ, “இது குறித்து வெளியே சொன்னால், உன்னைக் கொலை செய்துவிடுவேன்” என்று, கடுமையாக மிரட்டி உள்ளான். இதனால், இன்னும் பயந்துபோன அந்த இளம் பெண், இது குறித்து தன் பெற்றோரிடம் கூட எதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருந்துவிட்டார்.

இந்நிலையில், அந்த இளம் பெண்ணுக்குக் கடந்த 16 ஆம் தேதி திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த பெண் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அந்த மாணவியைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், அந்த பெண் 7 மாத கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு இளம் பெண்ணின் பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர். அத்துடன், மருத்துவமனையின் சார்பில் இது குறித்து அங்குள்ள போலீசாருக்கும் தகவல் தெரிவித்து உள்ளனர். 

இது குறித்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார், பாதிக்கப்பட்ட இளம் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தன் கல்லூரியின் ஊழியர் பிரதாப்பின் பாலியல் பலாத்காரம் குறித்து கூறி உள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், பிராதப் என்பவரை அதிரடியாகக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, பிரதாப் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும், “அந்த கல்லூரியில் இது போன்று எத்தனை மாணவிகளிடம் பிரதாப் இது போன்று நடந்துகொண்டான்?” என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த கல்லூரியில் பயிலும் மாணவிகளின் பெற்றோர் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.