பள்ளி படிக்கும் காலத்திலேயே சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி அதிகளவு ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை லக்ஷ்மி மேனன். கேரளாவில் இருந்து வந்து தமிழ் சினிமாவை கலக்கிய நடிகைகளில் இவரும் ஒருவர். தமிழில் லக்ஷ்மி மேனன் நடித்த முதல் படம் சுந்தர பாண்டியன். சசிகுமார் ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார். அதனை தொடர்ந்து விக்ரம் பிரபுவுடன் நடித்த கும்கி படமும் மிகப்பெரிய அளவில் அவரை பிரபலமாக்கியது. 

அதன் பின் தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். 2015-ல் தல அஜித்தின் தங்கையாக வேதாளம் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடைசியாக லக்ஷ்மி மேனன் நடிப்பில் றெக்க படம் 2016-ல் வெளிவந்தது. அதன் பின் நான்கு வருடங்களாக வேறு எந்த புதிய படங்களிலும் நடிக்காமல் இருக்கிறார் லக்ஷ்மி மேனன். அவர் தனது கல்லூரிப் படிப்பில் கவனம் செலுத்தி வந்தார் என அவ்வப்போது தகவல்கள் மட்டும் வந்தது.

தற்போது லக்ஷ்மி மேனன் தன்னுடைய உடல் எடையை அதிக அளவு குறைத்து மிகவும் ஒல்லியாக மாறியிருக்கிறார். கடந்த சில வாரங்களாக அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுவரும் புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. லக்ஷ்மி மேனனா இப்படி மாறி விட்டார் என பலரும் ஆச்சர்யம் அடைந்து இருக்கிறார்கள். பலரும் நீங்கள் எப்போது மீண்டும் நடிக்க துவங்க போகிறீர்கள் என அவரிடம் கேள்வி எழுப்பினார்கள்.

சென்ற கொரோனா லாக்டவுன் நேரத்தில் கூட லக்ஷ்மி மேனன் பரதநாட்டியம் முயற்சி செய்யும் வீடியோக்களை அதிக அளவு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார். அவற்றுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ள நடிகை லக்ஷ்மி மேனன் அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.

கடந்த சில நாட்களாய் நடிகை லக்ஷ்மி மேனனின் பெயர் பிக்பாஸில் அடிப்பட்டு வருகிறது. இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் நடிகை லக்ஷ்மி மேனன் அவ்வப்போது க்யூட் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் நடிகை லக்ஷ்மி மேனன் வெளியிட்ட புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் சேலை அணிந்திருக்கும் லக்ஷ்மி மேனன் நெற்றியில் பெரிய பொட்டு, லிப்ஸ்டிக் என பாரம்பரிய கெட்டப்பில் உள்ளார். அவர் வரைந்திருக்கும் டாட்டூவை குறிப்பிட்டு கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.