தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சியாக குறுகிய காலத்தில் உருவடித்துள்ளது ஜீ தமிழ்.சீரியல்,நிகழ்ச்சிகள்,திரைப்படங்கள் என்று தங்களின் வித்தியாசமான முயற்சிகளால் ரசிகர்களின் மனதில் வெகுவிரைவில் இடம்பிடித்தனர் ஜீ தமிழ்.

செம்பருத்தி,யாரடி நீ மோகினி, என்று இவர்கள் சீரியல்கள் நல்ல TRP-யையும் அள்ளி மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.இந்த சீரியல்களில் நடிக்கும் நடிகர்,நடிகைகள் ஜீ தமிழுக்கு வந்த பிறகு மிகவும் பிரபலமாக மாறினார்.சீரியல்கள் மட்டுமின்றி டான்ஸ் ஷோக்கள்,பாட்டு போட்டிகள் , ரியாலிட்டி ஷோக்கள் என்று தங்களால் முடிந்த அளவு வித்தியாசங்களை ரசிகர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

கொரோனா காரணமாக ஷூட்டிங்குகள் பாதிக்கப்பட்டு , மூன்று மாதங்களுக்கு பிறகு அரசு அறிவித்த  தளர்வுகளோடு தக்க பாதுகாப்போடு ஷூட்டிங்குகள் நடைபெற்று வருகின்றன.புதிய எபிசோடுகள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.ஜீ தமிழில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சீரியல் ஒளிபரப்பட்டு வருகிறது.

தற்போது ஜீ தமிழ் புது முயற்சியாக சீரியல் நட்சத்திரங்களை ஒன்றிணைத்து ஒரு ரியாலிட்டி ஷோ ஒன்றை நடத்தவுள்ளனர்.ஜீ சூப்பர் பேமிலி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஷோ வரும் அக்டோபர் 4ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 2.30 மணியளவில் ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஷோவின் ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இந்த ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இது வேற லெவல் கலாட்டா Zee Super Family From October 4th, Sundays 2:30 PM #ZeeSuperFamily #ZeeTamil

A post shared by zeetamil (@zeetamizh) on