2015 ஆம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான திரைப்படம் மாரி. காஜல் அகர்வால் ஜோடியாக நடித்திருந்தார். இதில் விஜய் யேசுதாஸ், வினோத், ரோபோ சங்கர், காளி வெங்கட், மைம் கோபி உள்பட பலர் நடித்திருந்தனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார். அனிருத் இந்த படத்திற்கு இசை அமைத்திருந்தார். இந்தப் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் பேசப்பட்டது. 

இந்நிலையில் இந்தப் படத்தின் டைட்டில் தீம் சாங்கான தர லோக்கல் பாடலை பிரிட்டனில் நடந்த சர்வதேச ரியாலிட்டி ஷோவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பிரிட்டனில் காட் டேலன்ட் என்ற நடன ரியாலிட்டி ஷோ நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் இதில் பங்குபெற்றுள்ளனர். அவர்கள் வீடியோ மூலமாக தங்கள் திறமைகளை நிகழ்ச்சியின் நடுவர்களுக்கு அனுப்பியுள்ளனர்.

இதில் மும்பையைச் சேர்ந்த X1X என்ற நடனக் குழுவினரும் பங்கேற்றனர். தனுஷ் எழுதி பாடிய இந்த தரலோக்கல் பாடலுக்கு அசத்தலாக நடனமாடி கலக்கியுள்ளனர். பிரமிடு போல நின்றும் தாவியும் மாடர்னாக நடனமாடி நடுவர்களைக் கவர்ந்துள்ளனர். இந்த நடனத்தைக் கண்டு அந்த நடுவர்கள் வியக்கின்றனர். இந்த வீடியோவை இயக்குனர் பாலாஜி மோகன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் தாகம் தீரா கலைஞர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். நடிகர், பாடலாசிரியர், பாடகர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்து என்டர்டெயின் செய்து வருகிறார். கார்த்திக் நரேன் இயக்கத்தில் D43 படத்திலும், ஆனந்த் எல்.ராய் இயக்கிவரும் அத்ரங்கி ரே படத்திலும் நடித்து வருகிறார். 

ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஜகமே தந்திரம். தனுஷ் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். விவேக் ஹர்ஷன் எடிட்டிங் செய்கிறார். தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ரகிட ரகிட பாடல் லிரிக் வீடியோவை வெளியிட்டது படக்குழு. லண்டன், சென்னை, மதுரை போன்ற பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. 

கலைப்புலி S தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். பரியேறும் பெருமாள் வெற்றிக்கு பின் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படத்தில் ரஜீஷா விஜயன் நாயகியாக நடிக்க நடிகர் லால், நட்டி நட்ராஜ், கௌரி கிஷன், லக்ஷ்மி பிரியா, யோகிபாபு ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர்.