16 வயது சிறுமியை வளர்ப்பு தந்தையும், தோழியின் அண்ணனும் அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில், அனைவரும் விலகி இருக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தினாலும், காமத்தை அடக்க முடியாத சில காம பிசாசுகள், பெண்கள் மற்றும் சிறுமிக்கு எதிரான தனது ஆதிக்கத்தை பாலியல் இச்சையில் செலுத்தி வருகின்றனர். அப்படி, சிறுமிகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றச் சம்பங்களுக்கு இந்த சம்பவமும் சாட்சி சொல்கிறது.

கடலூர் மாவட்டம் சிறுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 16 வயது அமுதாவிற்கு (பெயர் மாற்றப்பட்டு உள்ளது), அவரின் சிறு வயதிலேயே அவரது பெற்றோர் உயிரிழந்து விட்டனர். இதன் காரணமாக, தனது தந்தையின் அண்ணன் முறையான பெரியப்பா முறையான பிச்சை முத்து என்பவர், அந்த சிறுமிக்கு வளர்ப்பு தந்தையாக இருந்து வளர்த்து வந்தார்.

அந்த 16 வயது சிறுமியும், அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் படித்து வந்தார். நல்ல முறையில் படித்து வந்த அந்த சிறுமி, தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து வந்து உள்ளார்.

இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில், சிறுமி அருகில் உள்ள தனது பள்ளித் தோழியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்து உள்ளார். அப்போது, தோழியின் அண்ணன் 29 வயதான வெற்றிவேல் என்ற இளைஞர், அந்த சிறுமியை, மிரட்டி பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து உள்ளான். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, அழுதுகொண்டே வீடு திரும்பி உள்ளார்.

வீட்டில் தன்னுடைய வளர்ப்புத் தந்தையான பெரியப்பாவிடம், தோழியின் அண்ணன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்த விசயத்தைக் கூறி கதறி அழுதுள்ளார்.

அப்போது, சிறுமியின் அழுகையில் பரிதாபம் காட்டுவதற்குப் பதிலாக, “தானும் அப்படியே செய்தால் என்ன?!” என்று சபலப்பட்ட வளர்ப்புத் தந்தை, அந்த சிறுமியை மிரட்டியே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால், அந்த சிறுமி கருவுற்றார். சிறுமியின் கரு 3 மாதம் ஆன நிலையிலேயே சிறுமிக்கு அது தெரிய வந்தது. இந்த விசயம், சிறுமியின் வளர்ப்புத் தந்தைக்கும் தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் வளர்ப்புத் தந்தை, அருகில் உள்ள மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்து, சிறுமியின் கருவைக் கலைக்கக் கூறியுள்ளார்.

அப்போது, மருத்துவர்கள் சிறுமியிடம் தனியாக அழைத்துப் பேச்சுக்கொடுத்து, நடந்த உண்மைகளைக் கேட்டுள்ளனர். சிறுமியும் எல்லா உண்மைகளைக் கூற, இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவனை ஊழியர்கள், அங்குள்ள சிறுபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார், சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, போலீசாரிடமும் சிறுமி எல்லாவற்றையும் கூறி அழுது உள்ளார்.

இதனையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியின் வளர்ப்பத் தந்தை பிச்சைமுத்து மற்றும் தோழியின் அண்ணன் வெற்றிவேல் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, 16 வயது சிறுமியை வளர்ப்புத் தந்தையும், தோழியின் அண்ணனும் அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.