சில தினங்களுக்கு முன், நாடாளுமன்ற மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் நேற்று நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். முக்கியமாக சட்ட புத்தகம் கிழிப்பு, அவையை நடத்திய துணைத்தலைவர் மீது பாய்ந்தது என பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் அரங்கேறின. 

இந்த நிகழ்வுகளை தொடர்ந்து அவை துணைத்தலைவர் ஹரிவன்சுக்கு எதிராக 12 எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர அவைத்தலைவரிடம் நோட்டீஸ் அளித்து உள்ளனர். ஆனால், இந்த தீர்மானத்தை ஏற்க மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு மறுத்துவிட்டார்.  இந்த நிலையில், நேற்று மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட "டெரெக் ஓ பிரையன், சஞ்சய் சிங், ராஜு சதாவ், கே.கே. ராகேஷ், ரிபுன் போரா, டோலா சென், செய்யத் நஜீர் உசேன் மற்றும் எளமாறன் கரீம் ஆகியோர்  ஒரு வாரம் இடைநீக்கம் செய்யப்பட்டனர்" என்று நாயுடு திங்களன்று பாராளுமன்ற உறுப்பினர்களை ஒரு வாரம் இடைநீக்கம் செய்தபோது கூறினார்.

8 எம்.பிக்கள் ஒருவாரம் இடைநீக்கம் செய்யப்படுவதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வது 'ஜனநாயக இந்தியாவை முடக்குவது'  என்று கூறி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக தாக்கியுள்ளார். 

இதுபற்றி ராகுல்காந்தி தனது ட்விட்டரில் கூறி இருப்பதாவது:-

``ஆரம்பத்தில் மவுனம் சாதிப்பதன் ஊலமும் பாராளுமன்றத்தில் உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வதன் மூலமும்,  விவசாய கறுப்பு சட்டங்கள் குறித்த விவசாயிகளின் கவலைகளை கண்மூடித்தனமாக திசை திருப்புவதன் மூலமும்.  ஜனநாயக இந்தியாவை முடக்குவது என்பது தொடருகிறது. இந்த ‘எல்லாம் அறிந்த’ மத்திய அரசின் 'முடிவற்ற ஆணவம் 'முழு நாட்டிற்கும் பொருளாதார பேரழிவை' ஏற்டுத்தி உள்ளது" என அவர் கூறி உள்ளார்.

முன்னதாக இது தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், ``விவசாயிக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை கிடைக்கும் என்பதற்கு அரசாங்கம் உத்தரவாதம் அளிக்கும்" என்று விவசாய அமைச்சர் கூறுகிறார்.

``தனியார் வர்த்தகம் இன்றும் நடைபெறுகிறது. விவசாயிக்கு செலுத்தப்படும் விலை, குறைந்த பட்ச ஆதரவு விட குறைவாகவே உள்ளது. குறைந்த பட்ச ஆதரவு (எம்.எஸ்.பி) விலையை வேளாண் அமைச்சரால் உறுதிப்படுத்த முடிந்தால், அவர் ஏன் இதுவரை அவ்வாறு செய்யவில்லை? என்ன உத்தரவாதம் எந்த விவசாயி தனது விளைபொருட்களை எந்த வர்த்தகருக்கு விற்றார் என்பதை அமைச்சருக்கு எப்படித் தெரியும்? 

நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் நடக்கும் மில்லியன் கணக்கான பரிவர்த்தனைகளை அவர் எவ்வாறு அறிந்து கொள்வார்? அவரிடம் தரவு இல்லையென்றால், ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் குறைந்தபட்ச ஆதரவு விலை செலுத்தப்படுவதை அவர் எவ்வாறு உத்தரவாதம் செய்வார்? வெற்று வாக்குறுதி அரசாங்கத்தின் வெற்று வாக்குறுதியை நம்புவதற்கு விவசாயிகள் மிகவும் முட்டாள்கள் என்று அமைச்சரும் அரசாங்கமும் நினைக்கிறார்களா? ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கில் ரூ .15 லட்சம் வைக்கும் வாக்குறுதியை மோடி அரசு நிறைவேற்றியதா? விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வாக்குறுதியை மோடி அரசு நிறைவேற்றியதா? ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் உறுதிமொழியை மோடி அரசு நிறைவேற்றியதா?" என்று சரமாரியாக ப சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

இப்படியாக விவசாய மசோதாவுக்கு எதிர்ப்பார்கவும் - உறுப்பினர்கள் இடைநீக்கத்தை எதிர்த்தும் காங்கிரஸ் கட்சியினர், மத்திய அரசுக்கு எதிராக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர்.