தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பற்றிய வாழ்க்கை வரலாற்றை தற்போது பார்க்கலாம்.

- கருணாநிதி - தயாளு அம்மாள் தம்பதியினருக்கு கடந்த 1953 ஆம் ஆண்டு மகனாக பிறந்தார் மு.க.ஸ்டாலின்.

- சோவியத் கம்யூனிஸ்ட் தலைவர் ஜோசப் ஸ்டாலின் நினைவாக தந்தை கருணாநிதியால் சூட்டப்பட்ட பெயர்தான் “ஸ்டாலின்” என்பதாகும்.

- தன்னுடைய 14 வயதிலேயே அரசியல் ஆர்வம் ஸ்டாலினிடம் காணப்பட தொடங்கியது. 

- சென்னை கோபாலபுரம் பகுதியில், திமுக பிரதிநிதியாக அப்போது மு.க. ஸ்டாலின் செயல்பட தொடங்கினார்.

- மு.க. ஸ்டாலின், சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை வரலாறு பட்டம் படித்தார்.

- மேடை நாடகங்கள், சில திரைப்படங்கள் மற்றும் நெடுந்தொடரிலும் நடிகராக வலம் வந்து அசத்தியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

- கடந்த 1968 ஆம் ஆண்டில் நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில் திமுகவுக்காக முதன் முறையாக பரப்புரை மேற்கொண்டார்.

- கடந்த 1973 ஆம் ஆண்டு திமுகவின் பொதுக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் மு.க.ஸ்டான்.

- கடந்த 1976 ஆம் ஆண்டு அவரச நிலை பிரகடனத்தின் போது, கைது செய்யப்பட்டார். 

- சிறையில் ஓராண்டு காலம் கடும் சித்ரவதைக்கு ஆளான நிலையில், அதன் பிறகே சக திமுகவினர் மற்றும் தமிழக மக்கள் மத்தியில் அறிமுகமானார். அப்போதே அவர் மீதான மதிப்பும் கூடியது.

- திமுகவில் தொடங்கப்பட்ட இளைஞரணியில் ஓர் அமைப்பாளராக கடந்த 1982 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். 

- அதன் தொடர்ச்சியாக, அந்த இளைஞரணியில் மு.க.ஸ்டாலின், மாநிலச் செயலாளர் ஆனார்.

- கடந்த 1984 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் முதன் முறையாக போட்டியிட்டார் மு.க.ஸ்டாலின்.

- முதன் முறையாக போட்டியிட்ட போது மு.க.ஸ்டான் தனது வெற்றி வாய்ப்பை இழந்தார். 

- எனினும், கடந்த 1989, 1996, 2001, 2006 ஆம் ஆண்டுகளில் அதே தொகுதியில் மீண்டும் மீண்டும் போட்டியிட்டு மு.க.ஸ்டாலின் தொடர்ச்சியாக வெற்றிப் பெற்றார். 

- அதே நேரத்தில், கடந்த 1991 ஆம் ஆண்டு இடையில் ஒரு முறை அவர் தோல்வி அடைந்தார்.

- கடந்த 1996, 2001 ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சி மேயராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார் மு.க.ஸ்டாலின். 

- அப்போது, சென்னை நகரில் பல மேம்பாலங்களை கட்டி, சென்னை நகரின் உள்கட்டமைப்பை மேலும் பலப்படுத்தினார்.

- மு.க.ஸ்டான், கடந்த 2003 ஆம் ஆண்டு திமுக துணைப் பொதுச் செயலாளரார் ஆனார்.

- கடந்த 2008 ஆம் ஆண்டு திமுகவின் பொருளாளராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.

- கடந்த 2009 ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார். இதன் மூலமாக, தமிழகத்தின் முதல் துணை முதலமைச்சர் என்னும் சிறப்பு பெற்றார் அவர்.

- கடந்த 2011, 2016 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

- கடந்த 2017 ஆம் ஆண்டு திமுக செயல் தலைவராக மாறினார் மு.க.ஸ்டான்.

- திமுக தலைவரும், தந்தையுமான கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, கடந்த 2018 ஆம் ஆண்டு திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார்.

- திமுகவின் புதிய தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு - புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில், 39 தொகுதிகளில் திமுக அபார வெற்றிபெற்றது.

- கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து, திமுக தலைவராகவும், தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வந்தார்.

- மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்து முடிந்த 2021 தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று, கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. 

- இந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 3 வது முறையாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார்.

- 2021 மே 7 ஆம் தேதியான இன்று, தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார்.