ஹாலிவுட் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மர்வெல் ஸ்டுடியோஸ் காமிக்ஸில் இருந்த சூப்பர் ஹீரோக்களை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியது. பல சூப்பர் பவர்களோடு இருக்கும் பல சூப்பர் ஹீரோக்களை உருவாக்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது மார்வெல் ஸ்டுடியோஸ். இதன் தயாரிப்பில் வெளிவந்த அனைத்து சூப்பர்ஹீரோ திரைப்படங்களும் மார்வெல் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. 

2008 ஆம் ஆண்டு வெளிவந்த அயன் மேன் பாகம் 1-லிருந்து கடைசியாக வெளிவந்த ஸ்பைடர் மேன் ஃபார் ஃப்ரம் ஹோம் வரையில்  அனைத்து திரைப்படங்களையும் மார்வெல்ஸ் ரசிகர்கள் தவறாமல் பார்த்து விடுவார்கள். மார்வெல் ஸ்டுடியோவின் சூப்பர் ஹீரோக்களில் அயன் மேன், கேப்டன் அமெரிக்கா,ஹல்க்,என ஒவ்வொரு சூப்பர் இருக்கும் ரசிகர்கள் இருப்பது போலவே இதில் இருக்கும் ஒரு முக்கியமான வில்லத்தனம் கொண்ட சேட்டைகள் செய்யும் சூப்பர் ஹீரோவாக இருக்கும் லோக்கி-க்கும் தனியான ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் மற்ற சூப்பர் ஹீரோக்களின் ரசிகர்களும் கூட லோக்கியின் சேட்டை தனத்தை வெகுவாக ரசிப்பது உண்டு.

  wednesdays are the new friday loki web series releases on june 9th

சமீபத்தில் தி ஃபால்கன் அண்ட் தி வின்டேஜ் சோல்ஜர் - டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் என்ற ஓடிடி தளத்தில் வெப்சீரிஸாக வெளிவந்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற நிலையில் அடுத்ததாக வெளிவருகிறது லோக்கி வெப்சீரிஸ் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹிட்டில்ஸ்டன் நடிப்பில் வெளிவர இருக்கும் இந்த லோக்கி வெப்சீரிஸ் ஜூன் 9ஆம் தேதியிலிருந்து ஒளிபரப்பாக இருக்கிறது.  

முன்னதாக ஜூன் 11ஆம் தேதி வெளியாவதாக இருந்த இந்த வெப்சீரிஸ் தற்போது ஜூன் 9ஆம் நாள் வெளியாகிறது.  இதனை அறிவிக்கும் விதமாக வீடியோ வெளியிட்ட டாம் ஹிட்டில்ஸ்டன் இனி புதன் கிழமைகள் எல்லாம் வெள்ளி கிழமைகளாக  மாறப்போகிறது என தெரிவித்தார்.வழக்கமாக இது போன்ற  வெப்சீரிஸ்கள்  வெள்ளிக்கிழமைகளில் வெளியாவது வழக்கம். இந்நிலையில் இந்த வெப்சீரிஸ் புதன்கிழமை வெளியாவதால் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.