மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் யாருக்கெல்லாம் அமைச்சர் பதிவி வழங்கப்படும்? எந்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எந்த துறை வழங்கப்படும் என்ற உத்தேசப்பட்டியல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து உள்ளது. 

அதன் படி, திமுக தலைவர் மு.க ஸ்டாலின், வரும் 7 ஆம் தேதி பதவியேற்க இருக்கிறார். அதன்படியே, திமுகவின் சட்டப் பேரவைக் குழு தலைவராக நேற்று மு.க.ஸ்டாலின் தேர்வு அவர் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு மேல் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் பன்வாரில் லால் புரோகித்தை சந்தித்து தனது ஆதரவு எம்.எல்,ஏக்களினான 133 பேரின் ஆதரவு கடிதத்தை அளித்து, தமிழகத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினார். 

அப்போது, புதிய அமைச்சர் பட்டியலையும் மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் வழங்கினார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் யாருக்கெல்லாம் அமைச்சர் பதிவி வழங்கப்படும் என்பது குறித்தும், புதியதாக பொறுப்பேற்க உள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குறித்த உத்தேசப் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. 

அந்த பட்டியலின் படி, “மா.சுப்பிரமணியன், துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு” ஆகிய 4 பேர், அமைச்சர் பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.

இதில், மா.சுப்பிரமணியனுக்கு சுகாதாரத்துறையும், துரைமுருகனுக்கு நீர்ப்பாசனத்துறை துறையும், கே.என்.நேருவுக்கு உள்ளாட்சித்துறையும், நெடுஞ்சாலைத்துறையானது எ.வ.வேலுவிடமும் வழங்கப்படும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

அதே போல், தமிழக அரசின் புதிய தலைமைச்செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக, முதலமைச்சரின் தனிச்செயலராக உதயச்சந்திரன் ஐஏஎஸ், நியமனம் செய்யப்படவும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முக்கியமாக, முதலமைச்சரின் தனிச்செயலராக உமாநாத் ஐஏஎஸ் மற்றும் எஸ்.எஸ். சண்முகம் ஐஏஎஸ் ஆகியோரும் நியமனம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.