பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் இருந்து நேற்று அர்ச்சனா வெளியேற்றப்பட்டார். அவர் கடந்த வாரம் டாஸ்குகளில் மிக சிறப்பாகவே செயல்பட்டு வந்த நிலையில் அவர் எலிமினேட் செய்யப்பட்டது பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று திங்கட்கிழமை என்பதால் இந்த புதிய வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்று இருக்கிறது. 

கடந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடைபெற்ற நிலையில், இன்று வழக்கம் போல கன்ஃபெக்ஷன் ரூமிலேயே நடைபெற்றது. ஆரியை தான் அதிகம் பேர் நாமினேட் செய்தனர். முதல் ஆளாக வந்த சோம் ஷிவானி மற்றும் ஆஜித்தை நாமினேட் செய்வதாக கூறினார். பாலாவை நம்பி தான் அவர்கள் இருவரும் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள் என் சோம் குற்றம்சாட்டினார்.

அடுத்து வந்த அனிதா ஷிவானி பற்றி கூறினார். இதுவரை ஷோவில் அவங்க என்ன செய்திருக்காங்க என சத்தியமா தெரியல என அவர் தெரிவித்து உள்ளார். ஆஜித் மற்றும் கேபி ஆகியோர் அனிதாவை டார்கெட் செய்தனர். ஆரி எங்களை க்ரூப் என சொன்னார். ஆனால் முன்னிலை படுத்தி விளையாடுகிறார்கள் என்று அனிதா சொன்னார் என ஆஜித் குற்றம்சாட்டினார்.

ரியோ, ரம்யா ஆகியோர் ஆரியை தான் குறிவைத்தனர். அவர் நிறைய விஷயங்களுக்கு ஒத்துப்போக மாட்டேன் என்கிறார் என ரம்யா அவர் மீது குற்றம் சாட்டி இருக்கிறார். தற்போது மாட்னியா டாஸ்க்கை வழங்கியுள்ளார் பிக்பாஸ். முதலில் முன்வந்த ஹவுஸ்மேட் இன்னொரு ஹவுஸ்மேட்டை அழைப்பார். அவர் கையை குறிவைத்து அடிக்க வேண்டும். அடித்த நபர் சீட்டில் என்ன வார்த்தை உள்ளத, அதற்கு ஏற்றவாறு என்ன கேள்வியை வேண்டுமானாலும் கேட்கலாம். இதுவே மாட்டினியா டாஸ்க்கின் விதிமுறை. 

முதலில் வந்த ஆரி, ரம்யாவிடம் கேள்வியை முன்வைத்தார். அடுத்த வாரம் இரண்டு பேரை நாமினேட் செய்ய வேண்டும் என்றால், யாரை நாமினேட் செய்வீர்கள் என்று கேட்க... ஆரி மற்றும் கேபி என போட்டுடைத்தார் ரம்யா. அடுத்ததாக வந்த பாலாஜி, ஃபைனல்ஸ் உங்க கூட யார் இருக்கும்னு நினைக்கிறீங்க ? என்று கேட்டார். புன்னைகையுடன் ஆரி பதிலளிக்க வரும் தருணத்தில், ரியோ எழுந்து பிக்பாஸ் அய்யா உண்மையில் இவன் தான் நரி என்று நகைச்சுவயாக கூறினார். இந்த ப்ரோமோ பிக்பாஸ் விரும்பிகளை கவர்ந்துள்ளது.