2 இளைஞர்களை ஒரே நேரத்தில் காதலித்த இளம் பெண், திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் மற்றொரு காதலனுடன் அந்த இளம் பெண் ஓட்டம் பிடித்து உள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், அங்குள்ள தனியார் ஷோ ரூமில் பணியாற்றி வந்து உள்ளார். 

அப்போது, அவர் எந்நேரமும் ஃபேஸ்புக்கிலேயே அதிக நேரம் மூழ்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அந்த இளம் பெண்ணிற்கு ஃபேஸ்புக்கிலேயே அறிமுகம் ஆகி உள்ளார். நாட்கள் செல்ல செல்ல 

இந்த பழக்கம், அவர்களுக்குள் முகம் அறியாத காதலாக மாறி உள்ளது. 

இதன் காரணமாக, அவர்கள் இருவரும் ஃபேஸ்புக்கிலேயே காதலித்து வந்து உள்ளனர். இப்படியாக, அவர்கள் இருவரும் சுமார் 4 ஆண்டுகளாகக் காதலித்து 

வந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில், அவர்கள் இருவரும், தங்களது செல்போன் எண்ணை பகிர்ந்துகொண்ட நிலையில், நேரில் சந்தித்து தங்களது காதலை மேலும் வளர்த்துக்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இப்படியான சூழ்நிலையில், ஒரு கட்டத்தில் அந்த காதலர்கள் இருவரும் தங்களது காதலை தங்கள் வீட்டில் கூறி உள்ளனர். அதன் படி, இரு வீட்டார் பெற்றோரும் சம்மதம் தெரிவித்து உள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, இருவருக்கும் திருமண ஏற்பாடுகளை அவர்களது பெற்றோர் செய்து வந்தனர். அதன்படி, சென்னை வில்லிவாக்கம் பகுதியில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில், நேற்று இரவு அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில், கலந்து கொண்ட அந்த இளம் பெண், திருமண வரவேற்பு நிகழ்வு முடிந்த நிலையில், அதாவது திருமணத்திற்கு முதாள் நாள் இரவு திடீரென்று அந்த பெண் மாயமாகி உள்ளார். 

நீண்ட நேரமாக மணப்பெண்ணை காணவில்லை என்று, இருவீட்டார் பெற்றோரும் தவித்த நிலையில், அந்த திருமண மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை அவர்கள் ஆய்வு செய்து உள்ளனர். அப்போது, அந்த மணப்பெண், ஆட்டோவில் ஏறி மற்றொரு இளைஞருடன் சென்றது தெரிய வந்தது.

இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான மாப்பிள்ளை மற்றும் மாப்பிள்ளை வீட்டார் கடும் வேதனை அடைந்த நிலையில், இது தொடர்பாக விசாரித்து உள்ளனர். 

அப்போது, ஃபேஸ்புக் காதலனை கரம் பிடிக்கக் காத்திருந்த அந்த இளம் பெண், வேறொரு இளைஞருடன் கிண்டி காவல் நிலையத்தில் திருமணம் செய்து வைக்கக் கோரி தஞ்சம் அடைந்தது தெரிய வந்தது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த இரு வீட்டாரும், அப்படியே கிளம்பிச் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்குச் சென்று உள்ளனர்.

இது தொடர்பாக அந்த இளம் பெண்ணிடம் போலீசார் விசாரித்து உள்ளனர். அந்த விசாரணையில், “2 இளைஞர்களையும் ஒரே நேரத்தில் நான் காதலித்தேன் என்றும், அதில் தான் இன்று திருமணம் செய்யவிருந்த இளைஞரை விட, மற்றொரு இளைஞருடன் தான், நான் வாழ ஆசைப்படுகிறேன் என்றும், இதனால் 

அவருடன் என்னைச் சேர்த்து வைத்து, என்னைத் திருமணம் செய்துகொடுங்கள்” என்றும், போலீசாரிடம் அந்த பெண் கோரிக்கை விடுத்து உள்ளார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த திருமண நிச்சயம் செய்த காதலன், “எங்கள் திருமணம் திருமண வரவேற்பு வரை சென்று, திருமணத்திற்கு முதல் நாள் இப்படி ஓடிச்சென்றது இப்படிக் கூறுவது எந்த வகையில் நியாயம்?” என்றும், கேள்வி எழுப்பினார்.

மேலும், “என்னைக் காதலித்து ஏமாற்றி, திருமணம் வரை கொண்டு வந்து ஏமாற்றி மோசடி செய்ததாக அந்த காதலி மீது மாப்பிள்ளை புதிதாகப் புகார்” அளித்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் 
பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.