நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை டெல்லியிலிருந்து பிரதமர் மோடி காணொளி காட்சி வழியாக தொடங்கி வைத்தார்.  இந்தியாவில் 3000க்கு அதிகமான கொரோனா தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டு இருக்கிறது. 


அவசரகால பயன்பாட்டிற்குகாக கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சினை மத்திய அரசு அனுமதித்து இருக்கிறது. இதன் மூலம் ஒரு நாளைக்கு ஒரு மையத்தில் தலா 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டப்பட்டு வருகிறது. 


இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டு உள்ளது. உடல் வலி,  மயக்கம், அரிப்பு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களில் சிலர், சிறிது நேர மருத்துவ கண்காணிப்புக்கு வீடு திரும்பினர். 


டெல்லியின் தெற்கு  மாவட்டங்களில் தலா 11 பேருக்கும்,  மேற்கு டெல்லி மற்றும் கிழக்கு டெல்லி 6 பேரும், மத்திய டெல்லி 2 பேருக்கும் பக்க விளைவுகள் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அஞ்சி , தடுப்பூசியை மக்கள் தவிர்த்து வருகிறார்கள்.


கோவேக்சின் தடுப்பூசியால் செல்லுத்திக்கொண்டவர்களுக்கு  பக்க விளைவுகள் ஏற்பட்டால் ,  தகுந்த இழப்பீடு வழங்கப்படும் என சுகாதார உழியர்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனம் உத்தரவாதம் அளித்திருந்தது. இதை அவர்கள் ஒப்புக்கொண்டு படிவத்தில் கையெழுத்திட்ட பின்னரே தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஒருவேளை தடுப்பூசியால் மோசமான பக்க விளைவு ஏற்பட்டால் பாரத் பயோடெக் நிறுவனம் மூலம் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.