பிக் பாஸ் சீசன் 4 இறுதி வாரத்தில் மொத்தம் ஆறு போட்டியாளர்கள் பைனலுக்கு தேர்வாகி இருந்தார்கள். ஆனால் அதில் இருந்து கேப்ரியல்லா 5 லட்சம் பணத்துடன் வெளியேறிவிட்டார். அதனால் தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டுக்குள் இருக்கிறார்கள்.

நேற்று சனிக்கிழமை எபிசோடில் ஒன்று அல்லது இரண்டு எலிமினேஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை. வருத்தத்தில் இருந்த போட்டியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மட்டும் கமல் பேசி ஷோவை முடித்துவிட்டார்.

இந்நிலையில் இன்று கிராண்ட் ஃபினாலே மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. மாலை ஆறு மணிக்கு ஒளிபரப்பு தொடங்க இருக்கிறது. வந்திருக்கும் தகவல்களின்படி ஆரி தான் அதிக வாக்குகள் பெற்று டைட்டில் ஜெயித்துள்ளார். அதை கமல்ஹாசன் இன்று முறைப்படி அறிவிக்க இருக்கிறார். மேலும் இரண்டாவது இடம் பாலாஜி முருகதாஸுக்கு கிடைத்திருக்கிறது. 

அவர் செய்த விஷயங்கள் கெட்ட பெயரை பெற்று தந்திருக்கிறது என வெளியில் இருந்து வந்த மற்ற போட்டியாளர்கள் சொன்னதால் இந்த வாரம் முழுவதும் பாலாஜி சோகமாகவே இருந்தார் என்பது குறிப்பித்தக்கது. கேபி வெளியில் சென்ற பிறகு முகமெல்லாம் கடும் சோகம் மற்றும் கோபத்தில் கொந்தளித்து கொண்டிருந்த ரியோவுக்கு மூன்றாவது இடம் கிடைத்திருக்கிறது.

நான்காவது இடம் ரம்யாவுக்கும் கடைசி இடம் சோம் சேகருக்கும் கிடைத்திருக்கிறது. ரம்யா செம strong போட்டியாளர், அவர் டைட்டில் ஜெயிக்கவும் வாய்ப்பு இருக்கிறது என பலரும் பேசினார்கள். ஆனால் ஷோவின் இறுதிக்கட்டத்தில் அவர் அதிகம் வெறுப்பை மட்டுமே சம்பாதித்தார். எனது சிரிப்பு கூட போலி என சொல்லிவிட்டார்கள் என ரம்யா நேற்று வருத்தத்துடன் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பித்தக்கது.

இன்று வெளியான இரண்டாம் ப்ரோமோவில், ஐந்து வெற்றியாளர்கள் நாடி படபடக்க காத்துக்கொண்டுருக்கிறார்கள் என்று கமல் கூறுகிறார். அதன் பின் டைட்டில் வின்னர் கார்டை தொட்டு பார்த்து எவ்ளோ சூடு என்று கலக்கலாக பேசியுள்ளார். இது ஒருபுறமிருக்க, ஏற்கனவே எவிக்ட்டான போட்டியாளர்கள் நடனம், பாடல் என கலக்கியுள்ளனர்.