பிக்பாஸ் வீட்டில் இறுதி வாரம் என்பதால் இதற்கு முன் எலிமினேட் ஆன போட்டியாளர்கள் அனைவரும் பிக் பாஸ் வீட்டுக்குள் திரும்பவும் வந்திருந்தார்கள். விருந்தினராக வந்திருந்தாலும் வெளியில் என்ன ரெஸ்பான்ஸ் இருக்கிறது என வெளிப்படையாகவே போட்டியாளர்கள் அனைவரிடமும் கூறி விட்டார்கள். குறிப்பாக பாலாஜி கோபப்படுவது பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அவரிடம் ரேகா சொல்லி விட்டார். 

அர்ச்சனாவும் கிட்டத்தட்ட அதே கருத்தை பாலாஜியிடம் கூறினார். அதனால் இந்த வாரம் முழுவதும் பாலாஜி சோகமாக காணப்பட்டார். ரம்யா உள்ளிட்ட சிலரும் சோகமாகவே காணப்பட்டனர். இதுபற்றி கமல் நேற்றய நாளில் பேசியிருந்தார். வெளியில் ஒரு வாழ்க்கை இருக்கிறது இங்கு செய்யும் தவறுகளை கூட வேறு விஷயங்களை செய்து வெளியில் மாற்றி கொள்ளலாம் என அவர் கூறினார். 

பிக் பாஸ் டைட்டில் ஜெயித்தவர் மட்டும் தான் அதிக புகழ் பெற்றிருக்கிறார் என்பது இல்லை. ஷோவில் பங்கேற்ற அனைவருமே புகழ் பெற்று இருக்கிறார்கள். இறுதி வரை வந்தது வெற்றி தான். நீங்கள் வெளியில் சென்றால் உங்களுக்கு ஒரு பெரிய அங்கீகாரம் கிடைத்து இருக்கும். மற்ற நடிகர்கள் கூட உங்களை பார்த்து பொறாமை படுவார்கள் என கமல் கூறியிருக்கிறார்.

இப்படி போட்டியாளர்கள் அனைவரும் சோகத்துடன் இருக்கும் நிலையில் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நீண்ட நேரம் பேசினார் கமல். மேலும் போட்டியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் இதற்கு முன்பு வந்த சண்டைகளில் எதாவது மிச்சம் இருந்தால் சமாதானம் செய்துகொண்டு மன்னிப்பு கேட்டுக்கொள்ளுங்கள் என கமல் கூறினார்.

ரம்யா பேசும்போது வெளியில் இருந்து வந்தவர்கள் அவருக்கு கிடைத்திருக்கும் ரெஸ்பான்ஸ் பற்றி தெரிந்து வருத்தம் ஆனதாக கூறி இருக்கிறார். எனது சிரிப்பே போலி என சொல்லிவிட்டார்கள் என ரம்யா வருத்தமாக கூறி இருக்கிறார். அதன் பின் பாலாஜி பேசும்போது தான் கோபப்பட்டதை குறையாக பலர் சொன்னார்கள் என்றும், இப்போது கேம் முடிந்துவிட்டது, எதுவாக இருந்தாலும் வெளியில் சென்று நான் சமாளித்து கொள்கிறேன் என உறுதியாக கமலிடம் கூறினார். அதற்கு கமழும் பாராட்டு தெரிவித்தார். உங்களுக்கு நெறைய fans இருக்காங்க என்று கூறி அவரை ஆறுதல் படுத்தினார்.

இன்றைய கிராண்ட் ஃபினாலே ப்ரோமோவில், போட்டியாளர்கள் அனைவரும் ஸ்டைலாக ஆடை அணிந்து இறுதி கட்டத்திற்கு தயாராகி வருகிறார்கள். பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வெல்லப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 6 மணி நேர தொடர் கோலாகல கொண்டாட்டத்தை பார்த்து ரசிக்க ஆவலாக உள்ளனர் பிக்பாஸ் பிரியர்கள்.