சென்னை கொளத்தூர் வெங்கடேஸ்வரா நகரில் வசித்து வந்த இளம் பெண் ஒருவர், பாரதி நகர் ஏ.பி.சி. காலணியைச் சேர்ந்த லவ்லி கணேஷ் என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு, முகநூல் மூலமாக நட்பு ஏற்பட்டுள்ளது. இது, நாளடைவில் காதலாக மாறி உள்ளது. 

இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன் படி, அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து காதலன் லவ்லி கணேஷ், அந்த இளம் பெண்ணை தாலி கட்டி திருமணம் செய்து உள்ளார். 

அந்த சமயத்தில் தங்களது மகளை காணவில்லை என்று, அவரது பெற்றோர்கள் தேடி வந்துள்ளனர். ஆனால், மகள் எங்கு தேடியும் கிடைக்காததால், சென்னை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். 

அந்தப் புகாரின் அடிப்படையில், போலீசார் அந்த இளம் பெண்ணை தேடி வந்தனர். இந்த செய்தியை அறிந்த லவ்லி கணேஷ் மற்றும் அந்த இளம் பெண் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். 

அப்போது காவல் துறை விசாரணையில், கணேஷ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டதாகவும் அவருடன் தனியாக வாழப் போவதாகவும் அந்த பெண் கூறியுள்ளார். 

இதனைத் தொடர்ந்து ராஜாஜி குடியிருப்பு பகுதியில், ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அந்த தம்பதியினர் குடியேறி உள்ளனர். அதன் பிறகு தான், வக்கிர புத்தி வெளிச்சமாகி உள்ளது.

அதாவது, காதல் மனைவி என்று பாராமல் தனது மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்க அந்த காதலன் முயற்சி செய்துள்ளான். 

மேலும், தனது நண்பர்களையும் வீட்டிற்குக் கூட்டி வந்து கூட்டுப் பாலியல் தொந்தரவும் அவன் செய்துள்ளான் என்று, கூறப்படுகிறது. இதை விட கொடுமையாகக் காம வக்ர உச்சத்திற்குச் சென்ற கணேஷ், ஒரு 17 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்து, தனது காதல் மனைவியின் முன்பே உல்லாசமாக இருந்து உள்ளார் என்றும், கூறப்படுகிறது. 

இந்தச் சூழ்நிலையில் தனது கணவரின் செக்ஸ் தொல்லை எல்லை மீறி போனதால், அவரது வக்கிர பிடியில் இருந்து தப்பி வந்து வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த பெண் தஞ்சம் புகுந்துள்ளார். அங்கு, அந்த இளம் பெண் தனது காதல் கணவரை பற்றி பரபரப்பாக புகார் ஒன்றையும் அளித்து உள்ளார். 

இந்தப் புகாரில் பல்வேறு விதமான திடுக்கிடும் தகவல்களை அளித்ததாகத் தெரிகிறது. இந்தப் புகாரில், தனது பெற்றோரின் சம்மதம் இன்றி தான் திருமணம் செய்து கொண்டதாகவும், தான் அணிந்திருந்த ஒன்னரை சவரன் செயின், அரை சவரன் மோதிரம் ஆகியவற்றை அடகு வைத்து தான், ராஜேஸ் நகர் வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுத்ததாகவும் அந்த புகாரில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

அத்துடன், அன்று இரவே 17 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்து, “நண்பர் என்றும் வீட்டு வேலைக்கு உதவியாக இருப்பார்” என்றும் கூறி, திருமணம் ஆன முதல் நாள் இரவிலே வீட்டில் தங்க வைத்திருக்கிறார். 

அதன் பிறகு, “ஓரிரு நாட்களிலேயே தன்னிடம் அவர்கள் இருவரும் நடந்து கொண்ட விதத்தை கண்டு, சந்தேகம் ஏற்பட்டு அந்த பெண் கணவரிடம் கேட்டபோது, கணவன் - மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, பிரச்சனை வெடித்துள்ளது. அப்போது, கணவன் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், அந்த பெண் புகாரில் கூறியுள்ளார்.

மேலும், “இனி மேல் தன்னிடம் இதைப்பற்றிக் கேட்டால், உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டி, அந்த வீட்டில் இருந்த ஒரு அறையில் தனது கைகளை கட்டி வாயில் துணியை வைத்து பலமுறை பாலியல் டார்ச்சர் கொடுத்தார்” என்றும், அந்த புகாரில் தெரிவித்துள்ளார். 

“இந்த தொந்தரவினால் தான், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த சமயத்தில் எனது வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறியதால், என்னிடம் காதல் ஆசை வார்த்தைகள் கூறி என்னை என் தாயார் வீட்டிற்குச் செல்ல விடாமல் தடுத்தும், மது அருந்த வற்புறுத்தி என்னை மது அருந்த செய்தபோது அந்த 17 வயது சிறுமியும் தன்னிடம் பாலியல் தொந்தரவு செய்ததாகவும்” திடுக்கிடும் தகவல்களை அவர் கூறியிருக்கிறார்.
 
குறிப்பாக, “அவர்கள் தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்து தனது நண்பர்களுக்கு அனுப்பி அவர்களையும் வீட்டிற்கு வரவழைத்து தன்னை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்த முற்படும் போது, நான் கத்தி கூச்சலிட்டதால், அடையாளம் தெரிந்த எனது கணவரின் 4 நண்பர்களும் வீட்டை விட்டு ஓடி விட்டனர் என்றும், நண்பர்கள் சென்றவுடன் மீண்டும் வலுக்கட்டாயமாகக் கட்டாயப்படுத்தி நிர்வாணப்படுத்தி கைகட்டி வாய் பொத்தி பாலியல் தொந்தரவு செய்து 'நீ என்னுடைய பதினோராவது மனைவி' என்றும், இருந்த வீடியோக்களை என்னிடம் காட்டி என்னை மனரீதியாகத் துன்புறுத்தியதாகவும் அந்த புகாரில், பாதிக்கப்பட்ட அந்த பெண் தெரிவித்து உள்ளார். 

இந்த புகாரைப் பெற்றுக்கொண்ட வில்லிவாக்கம் மகளிர் காவல் நிலையம் போலீசார், கணவர் லவ்லி கணேஷ் உட்பட இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன், அவர்கள் பிடியில் இருந்த 17 வயது சிறுமியும் தற்போது மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.