கிறிஸ் கெயிலுக்கு இணையாக இந்திய வீரர் சஹால், தன்னுடைய ஒல்லியான கட்டுடல் வலிமையைத் தான் அணிந்திருந்த டிசர்டை கழட்டி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்து உள்ளது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 

ஐபிஎல் தொடரின் 26 வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் நேற்று விளையாடின. இதில், முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை எடுத்தது.

பின்னர், 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களம் இறங்கியது. போட்டியில், பஞ்சாப் அணியின் சிறந்த பந்துவீச்சால், ஆர்சிபி வீரர்கள் தொடர்ந்து அவுட்டான வண்ணம் இருந்தனர். 

இதனால், பஞ்சாப் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி சார்பில் ஹர்பிரீத் பிரார் 3 விக்கெட்டும், ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 

போட்டிக்கு பிறகு, இரு அணி வீரர்களும் ஒருவருடன் ஒருவர் ஜாலியாக பேசிக் கொண்டு இருந்தனர். 

அப்போது, பஞ்சாப் வீரர் கிறிஸ் கெயில், தன்னுடைய ஜெர்சியை கழட்டி தன்னுடைய கட்டுமஸ்தான உடலை காட்டி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார்.

இதனை அவர் அருகில் நின்று பார்த்த ஆர்சிபி சுழற்பந்துவீச்சாளர் சஹாலும், திடீரென்று தன்னுடைய ஜெர்சியை கழட்டி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். 

அப்போது, கிறிஸ் கெயில் மற்றும் சஹால் ஆகிய இருவரும், உலக ஜாம்பிஜயன் பாடி பில்டர்களைப் போல போஸ் கொடுத்து நின்றனர்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. இதில், கிறிஸ் கெயில் உடலோடு ஒப்பிட்டு சஹாலை பலரும் கிண்டல் அடித்து வருவது 
குறிப்பிடத்தக்கது.