கடந்த ஆண்டு மியான்மரில் இறுதியில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூகியின் ஜனநாயக தேசிய லீக் கட்சி வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் இந்த தேர்தல் முடிவை ஏற்க மறுத்து அதிகாரத்தை கைப்பற்றிய ராணுவத்திற்கு எதிராக, பிப்ரவரி மாதம் முதல் நாடு முழுவதும் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


இந்த போராட்டத்தின் போது நடந்த கலவரத்தில் பச்சிளம் குழந்தைகள் உட்பட 114 பேர் ஒரே நாளில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் நூற்றுக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் பச்சிளம் குழந்தை, 13 வயது சிறுமி உள்ளிட்ட 114 பேர் நேற்று ஒரே நாளில் கொல்லப்பட்டு உள்ளனர். காயம்பட்ட ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.


சாலையில் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்களையும் ராணுவத்தினர் தாக்கி வருகிறார்கள்.  ராணுவத்தினரின் இந்த செயலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல்வேறு நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.