பாலிவுட் திரையுலகில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை ராக்கி சாவந்த். இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 14-வது சீசனில் கலந்து கொண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் ஹோலி பண்டிகை ஸ்பெஷலாக கலர்ஸ் தொலைக்காட்சியில் ரங் பர்சே நிகழ்ச்சி நேற்று இரவு 7 மணிக்கு ஒளிபரப்பானது.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராக்கி சாவந்த் டான்ஸ் ஆடினார். அப்போது அவர் மேடையில் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தபோது அவரது மேலாடையான ஜாக்கெட் கிழிந்துவிட்டது. இது குறித்து வெளியான வீடியோ வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில் ராக்கி சாவந்த் பேசியிருப்பதாவது, நான் பெரிதாக எதுவும் செய்யாத போதே என் ஜாக்கெட் கிழிந்துவிட்டது. என்ன மாதிரி ஜாக்கெட்டை தைத்திருக்கிறார்கள். ஊக்கை மாட்டிக் கொண்டு என்னால் எப்படி நடனமாட முடியும் ? நான் என்ன செய்தேன்? நாங்கள் கலைஞர்கள். அப்புறம் நாங்கள் தான் சர்ச்சையை ஏற்படுத்துவதாக மக்கள் எங்களை குறை சொல்வார்கள். 

யாராவது வேண்டுமென்றே ஜாக்கெட்டை கிழித்துக் கொள்வார்களா ? மொத்த யூனிட்டும் எனக்காக காத்துக் கொண்டிருக்கிறது என்றார். ரங் பர்சே நிகழ்ச்சியில் பிக் பாஸ் டைட்டிலை வென்ற ருபினா திலைக், தீபிகா காகர், சித்தார்த் சுக்லா, மோனலிசா உள்ளிட்ட பிரபலங்களும் டான்ஸ் ஆடினார்கள்.

முன்னதாக பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ருபினா திலைக்கின் கணவர் அபிநவ் சுக்லா மீது ராக்கி சாவந்துக்கு காதல் ஏற்பட்டது. இதை பார்த்து ருபினா கோபம் அடைந்தார். ஆனால் ராக்கி அடங்குவதாக இல்லை. ராக்கி சாவந்துக்கும், இங்கிலாந்தை சேர்ந்த தொழில் அதிபர் ரித்தேஷுக்கும் திருமணம் நடந்தது. தனக்கு திருமணமாகிவிட்டது என்று ராக்கி சொல்கிறாரே தவிர இதுவரை கணவரை கண்ணில் காட்டவில்லை. 

ராக்கியின் அம்மாவுக்கு புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டதால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக ராக்கி தெரிவித்தார். மேலும் தான் குண்டாக, அசிங்கமாக இருப்பதாக பலரும் தன்னை கமெண்ட் அடித்ததாக ராக்கி அண்மையில் கூறி பரபரப்பாக்கினார்.