ஜெயலலிதா சந்தித்த அவமானங்களை நானும் சந்தித்தேன் என்று நடிகை குஷ்பு திமுக-வின் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார். 


ஆயிரம் விளக்கு தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி, நடிகை குஷ்புவுக்கு ஆதரவாகத் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.  அப்போது பேசிய குஷ்பு,’’ இதுவரை திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இந்த முறை நான் இங்கு வெற்றி பெற்றால் அது மக்களின் வெற்றி. ஆயிரம் விளக்கு தொகுதி திமுகவின் கோட்டை அல்ல.  திமுகவின் கோட்டை என்றால் 10 ஆண்டுகளுக்கு முன் ஸ்டாலின் கொளத்தூருக்கு சென்றிருக்க மாட்டார். ஆயிரம் விளக்கு தொகுதி அதிமுகவின் கோட்டை, பாஜகவின் கோட்டை, கூட்டணிக் கட்சிகளின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும். 


தி.மு.க பேச்சாளர்கள் தொடர்ந்து இழிவாகப் பேசி வருகிறார்கள். ஸ்டாலின் ஆட்களை அனுப்பி வீட்டில் கல்விட்டு அடித்தார்கள். சேலையை இழுத்து அசிங்கப்படுத்தினர். ஜெயலலிதா சந்தித்த அவமானங்களை நானும் சந்தித்தேன். என்னைக் கட்சி மாறுகிறேன் என்று கூறுகிறார்கள். ஏன் வேறு யாரும் கட்சி மாறவில்லையா? என்னுடைய வெற்றி ஜெயலலிதாவின் வெற்றி. நீங்கள் செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா ” என்று பேசினார்.