கே.பாலச்சந்தர், பாரதிராஜா, அஞ்சலி நடித்த ரெட்டை சுழி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஆரி அர்ஜூனன். மாலை பொழுதின் மயக்கத்திலே படத்தில் அசத்தலாக நடித்தாலும், அவரது மூன்றாவது படமான நெடுஞ்சாலை படத்தில் ஆரியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதன் பின் மாயா, தரணி, உன்னோடு கா போன்ற படங்களில் நடித்தார். 

சமூக பணிகளால் பலரின் ஆதரவை பெற்ற ஆரி, பிக்பாஸ் சீசன் 4 ல் பங்கேற்றதன் மூலம் மேலும் புகழடைந்தார். பிக்பாஸ் வீட்டிற்குள் ஆரியின் நேர்மையான நடவடிக்கைகளால் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்று, பிக்பாஸ் டைட்டிலை வென்றார்.

ஆரி பிக் பாஸ் சீசன் 4 டைட்டில் ஜெயித்த நிலையில் அவருக்கு பெரிய அளவில் ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவருக்காக இணையத்தில் ஆர்மியும் செயல்பட்டு வருகிறது. புதிதாக நடித்து வரும் படத்தில் முதல் முறையாக போலீஸ் வேடத்தில் ஆரி நடிக்கிறார். இதனை இவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இன்ஸ்டாகிராம் மூலம் தனது ரசிகர்களிடம் பேசுவதை ஆரி வழக்கமாகக் கொண்டுள்ளார். பொதுவாக தனது போட்டோக்கள், ஏதாவது வீடியோக்களை மட்டும் தான் ஆரி பதிவிடுவார். ஆனால் நேற்று, முதல் முறையாக சினிமா பாடல் ஒன்றிற்கு தனது மகள் ரியாவுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

விஸ்வாசம் படத்தில் தல அஜித் மகளுடன் இருக்கும் கண்ணான கண்ணே பாடலுக்கு தனது மகளுடன் க்யூட்டான அசைவுகளை வெளிப்படுத்திய பாடலை ஆரி பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை 70,000 க்கும் அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aari Arujunan (@aariarujunanactor)