கடந்த 2008-ம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சுனைனா. அதனைத் தொடர்ந்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். வெகு நாட்களுக்கு பிறகு அட்லீ இயக்கிய தெறி படத்தில் கௌரவ ரோலில் நடித்திருந்தார். 

கடந்த 2019-ம் ஆண்டில் எனை நோக்கி பாயும் தோட்டா, சில்லுக்கருப்பட்டி போன்ற படங்கள் வெளியாகி அசத்தின. தற்போது யோகிபாபுவுடன் ட்ரிப் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கும் இந்த படத்தில் கருணாகரண் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். 

த்ரில்லர் கலந்த நகைச்சுவை படமாக இந்த படம் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதயஷங்கர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். அடர்ந்த காட்டில் மாட்டுக்கொள்ளும் மனிதர்கள் எப்படி தப்பித்து வருகிறார்கள் என்பதே இதன் கதைக்கரு. 

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் 5-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டீஸர் மற்றும் முதல் சிங்கிள் What a life எனும் பாடல் பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

தமிழ் திரையுலகில் பிஸியாக இருக்கும் நடிகர் யோகி பாபு. இவரது பெயர் இல்லாமல் திரைப்படங்கள் வெளியாவதே இல்லை என்றும் கூறலாம். ட்ரிப் திரைப்படத்தை தொடர்ந்து ஜெகஜாலக்கில்லாடி, பிஸ்தா, பேய் மாமா ஆகிய திரைப்படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு காத்திருக்கிறது. யோகிபாபு கைவசம் சைத்தான் கா பச்சா, சதுரங்க வேட்டை2, அடங்காதே, பன்னிக்குட்டி, மண்டேலா, வெள்ளை யானை, கடைசி விவசாயி, தனுஷ் நடிக்கும் கர்ணன் போன்ற படங்களும் ரிலீஸ் பட்டியலில் உள்ளது.