மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், ‘’ தமிழகத்தில் இப்போது சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. ஆனால் திமுக ஆட்சி காலம் அராஜக ஆட்சி காலம். மதுரைகிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் அராஜகமானவர். அதிமுக வேட்பாளர் அமைதியானவர். மாநிலத்தில் இருக்கும் அனைத்து எளிய மக்கள் மீது அக்கறை கொண்ட அரசு அதிமுக. 


50 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில்  தற்போது தான் நீர் நிலைகள் நிரம்பி உள்ளது. திமுக ஆட்சி மீண்டும் வந்தால் கட்டப்பஞ்சாயத்து தான் நடக்கும். கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்த கட்சி தி.மு.க. அந்த கட்சி ஆட்சிக்கு வந்தால், உங்கள் சொத்து உங்களிடம் இருக்காது. 


விவசாயிகளின் கஷ்டங்களை உணர்ந்து பல திட்டங்களை அதிமுக அரசு அமல்படுத்தி இருக்கிறது.  24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது” என்று பேசினார்.