அதிமுக பொதுக்குழு மேடையில் ஒ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி ஆகியே இருவரும், அருகருகே அமர்ந்து உள்ள நிலையில், “அண்ணன் ஓபிஎஸ்” என்று கூறி, இபிஎஸ் பேசியது, அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் சற்று முன்னதாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதனால், பொதுக்குழு கூட்டம் நடைபெறும் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்திற்கு உள்ளேயேயும், வெளியேயும், அக்கட்சியின் ஆயிரக்கணவர்கள் திரண்டு உள்ளதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த பொதுக்குழுவிற்கு சற்று முன்னதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்த நிலையில், அவரைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி வருகை தந்துனர்.

அப்போது, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு மலர் கொத்து கொடுத்து வரவேற்றார் அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன்.

இதனைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்து உள்ளனர்.

அப்போது, அதிமுக பொதுக் குழு முறைப்படி தொடங்கிய நிலையில், “பொதுக் குழுவை, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நடத்துவதற்கு” ஒ.பன்னீர்செலவம் முன்மொழிந்தார். 

அதன் தொடர்ச்சியாகவே, ஒ.பன்னீர்செல்வம் முன்மொழிந்ததை எடப்பாடி பழனிசாமி வழி மொழிந்தார்.

குறிப்பாக, ஒ.பன்னீர்செல்வம் முன்மொழிந்ததை எடப்பாடி பழனிசாமி குறிப்பிடும் போது “அண்ணன் ஓபிஎஸ் முன்மொழிந்ததை நான் வழி மொழிகிறேன்” என்று, கூறினார். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதன் தொடர்ச்சியாக அங்கு வந்து பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், “அதிமுக பொதுக் குழு தீர்மானங்களை நிராகரிப்பதாக” ஆவேசமாக பேசினார். இதனால், அங்கு கூடியிருந்த சக உறுப்பினர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் வந்து பேசிய கே.பி.முனுசாமி, “அடுத்த பொதுக் குழுவில் ஒற்றைத் தலைமையுடன், அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படும்” என்று, கே.பி.முனுசாமி சூளுரைத்தார். 

மேலும், “பொதுக்குழு உறுப்பினர்கள் அனைத்து தீர்மானங்களையும் நிராகரித்துவிட்டனர் என்றும், அனைத்து உறுப்பினர்களின் கோரிக்கை ஒற்றைத் தலைமை வரவேண்டும் என்பது தான்” என்றும், கே.பி.முனுசாமி பேசினார். 

அதன் தொடர்ச்சியாக அங்கு வந்து பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, “என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.. இருட்டுனில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே தலைவன் இருக்கிறான் மயங்காதே அந்த தலைவன் வருவான்.. வெளியே வருவான்.. வெகு விரைவில் வருவான்” என்று, பாட்டு பாடி, தனது கருத்துக்களை முன்வைத்தார்.

முக்கியமாக, “அதிமுகவின் அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன், கழக செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்களால் ஒரு மனதாக தேர்வு செய்யப்படுகிறார்” எடப்பாடி பழனிசாமி, பேசினார். இதனை பலரும் வரவேற்றுனர். இப்படியாக பொதுக்குழு நடைபெற்று வருகிறது.