இந்திய திரை உலகின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். 

இதனிடையே சமீபத்தில் கன்னடத்தில் தயாராகி தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற சார்லி திரைப்படத்தை ரஜினிகாந்த் பார்த்து ரசித்துள்ளார். இயக்குனர் கிரண்ராஜ்.K இயக்கத்தில் ரக்ஷிட் ஷெட்டி கதாநாயகனாக நடித்திருக்கும் 777 சார்லி திரைப்படத்தில் சார்லி எனும் கதாபாத்திரத்தில் அழகிய நாய் நடித்துள்ளது. 

மேலும் சங்கீதா ஸ்ரீங்கேரி, பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.கடந்த ஜூன் 10ஆம் தேதி வெளிவந்த 777 சார்லி திரைப்படம் அனைத்து மொழி ரசிகர்கள் மத்தியிலும் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட்டானதோடு விமர்சன ரீதியாகவும் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. 

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக ரக்ஷிட் ஷெட்டியை அழைத்து பாராட்டி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசியில் அழைத்து பாராட்டியது குறித்து ரக்ஷித் ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார். அந்த பதிவு இதோ…
 

What an amazing start to the day!☺

Received a call from Rajinikanth sir. He watched #777Charlie last night and has been in awe of the film. He spoke highly of the making quality, the deeper designs of the film, and especially expressed his admiration for the climax and….

— Rakshit Shetty (@rakshitshetty) June 22, 2022