லிப்ட் கேட்ட மாணவிகளுக்கு லிப் டு லிப் கொடுத்த இளைஞன்! கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம்..

லிப்ட் கேட்ட மாணவிகளுக்கு லிப் டு லிப் கொடுத்த இளைஞன்! கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம்.. - Daily news

காரில் லிப்ட் கேட்ட பள்ளி மாணவிகளான அக்காள் - தங்கையை கடத்தி சென்று, இரண்டு இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் புதன்சந்தை பேட்டை பகுதியைச் சேர்ந்த சகோதரிகள் இருவர், தந்தை இல்லாத நிலையில், தாயாரின் அரணைப்பிலேயே வசித்து வருகின்றனர்.

அத்துடன், இந்த சகோதரிகள் இருவரும் அங்குள்ள ஒரு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்த சூழலில் தான் தேர்வு விடுமுறையின் போது, ஈரோட் டில் உள்ள ஜவுளிகடைக்கு சகோதரிகள் இருவரும் வேலைக்கு சென்று உள்ளனர். அதன்படி, கடந்த 18 ஆம் தேதி காலை வேலைக்கு சென்ற அந்த இரு சகோதரிகளும் அன்று இரவு வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து அந்த சிறுமியின் தாயார், அந்த பகுதியில் பல்வேறு இடங்களில் தேடியும், சகோதரிகள் இருவரும் கிடைக்கவில்லை.

அப்போது, அன்றைய இரவு செல்போனில் மாணவிகளின் தாயாரை தொடர்பு கொண்ட ஒருவர், “உங்கள் மகள்கள் இருவரும் வீட்டிற்கு திரும்பி விட்டார்களா?” என்று,  சம்மந்தமே இல்லாமல் விசாரித்து விட்டு, இணைப்பை துண்டித்து உள்ளார். 

இதனால், சந்தேகமடைந்த அந்த பெண்களின் தாயார், இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளார். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், குறிப்பிட்ட அந்த எண்ணை தொடர்பு கொண்டு உள்ளனர். அப்போது, அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான விசாரணையில், அந்த செல்போன் எண்ணை அதே பகுதியைச் சேர்ந்த 21 வயதான சந்தோஷ் என்பவர் பயன்படுத்தி வந்ததும், கண்டுபிடிக்கப்பட்டது. 

மேலும், அங்குள்ள ஒரு மேல்நிலைத் தொட்டி சுத்தம் செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வரும் சந்தோசும், அவரது நண்பர் வினோத்தும் சேர்ந்து, கம்பெனி காரில் குறிப்பிட்ட இந்த 2 மாணவிகளையும் கடத்திச் சென்று, ஒரு தனியார் தங்கும் விடுதியில் அடைத்து வைத்து தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக விரைந்துச் சென்ற போலீசார், இரு மாணவிகளையும் பத்திரமாக மீட்டனர். 

அத்துடன், மாணவிகளை கடத்திச் சென்று அடைத்து வைத்திருந்த 2 இளைஞர்களையும் அதிரடியாக கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், “அந்த இருவரும், மாணவிகளுக்கு அறிமுகமானவர்கள் என்றும், இரவு வேலை முடிந்து வீடு திரும்ப முயன்ற போது, தங்கள் காரில் பள்ளிபாளையம் கொண்டு சென்று விடுவதாக கூறி, அந்த மாணவிகளை கடத்திச் சென்று, நாமக்கல் தங்கும் விடுதியில் வைத்து தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததும்” தெரிய வந்தது. 

இதனையடுத்து, சம்மந்தப்பட்ட 2 பேரையும் விசாரணைக்காக அங்குள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசார் ஒப்படைத்த நிலையில், அந்த இருவர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட் உள்ளது. 

அதன் தொடர்ச்சியாக, இருவரையும் நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தி, போலீசார் நாமக்கல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment