அடி தூள்...வெயிட்டாக வந்திறங்கிய வாரிசு பட மூன்றாவது லுக் போஸ்டர் !
By Aravind Selvam | Galatta | June 22, 2022 17:18 PM IST

தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்திகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய்.இவர் நடிப்பில் தயாராகியுள்ள பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் படம் வாரிசு.
தோழா,மஹரிஷி போன்ற வெற்றி படங்களை இயக்கிய வம்சி பைடிபைலி இந்த படத்தினை இயக்குகிறார்.ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.
தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் சரத்குமார்,பிரபு,பிரகாஷ்ராஜ்,ஜெயசுதா,தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த்,ஷாம்,சங்கீதா,யோகி பாபு,சம்யுக்தா ஷண்முகம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படம் 2023 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
படத்தின் நாயகன் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.தற்போது இந்த படத்தின் சூப்பரான மூன்றாவது போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் லைக்குகளை அள்ளி வருகிறது.இந்த மாஸ் போஸ்ட்டரை கீழே உள்ள லிங்கில் காணலாம்
#VarisuThirdLook pic.twitter.com/xgMg7pVSyg
— Vijay (@actorvijay) June 22, 2022