ஆகச் சிறந்த நடிகராக பல கோடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ள நடிகர் தனுஷ் ஹாலிவுட்டில் தி க்ரே மேன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவெஞ்சர்ஸ் எண்டு கேம் படம் இயக்குனர்களான ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தி க்ரே மேன் திரைப்படம் வருகிற ஜூலை 15ஆம் தேதி குறிப்பிட்ட சில திரையரங்குகளிலும் தொடர்ந்து ஜூலை 22-ஆம் தேதி நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் தளத்திலும் ரிலீஸாகவுள்ளது.

முன்னதாக தனது சகோதரரும் இயக்குனருமான செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகும் வாத்தி (SIR) திரைப்படத்தில் நடிகர் தனுஷ் தற்போது நடித்து வருகிறார். 

இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 18-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து நித்யாமேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி ஷங்கர், பிரகாஷ்ராஜ் மற்றும் பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா.GK படத்தொகுப்பு செய்துள்ள திருச்சிற்றம்பலம் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத், தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் இசையமைக்கிறார். திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் முதல் பாடலாக தாய்க்கிழவி பாடல் வருகிற ஜூன் 24ஆம் தேதி வெளியாக உள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தாய்க்கிழவி பாடலை நடிகர் தனுஷ் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தின் தாய்க்கிழவி பாடல் ரிலீஸ் அறிவிப்பை தெரிவிக்கும் வகையில் கலகலப்பான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியானது. அந்த ப்ரோமோ வீடியோ இதோ…