என் தாயைப் பற்றியே இழிவுப்படுத்தி பேசியுள்ளனர் என்று உணர்ச்சிவசப்பட்டு தழுதழுத்த குரலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.


சென்னை திருவொற்றியூரில் நடந்த தேர்தல் பரப்புரையில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,“ திமுகவை சேர்ந்த பொறுப்பாளர் ஒருவர் என் தாயைப்பற்றி கீழ்த்தரமாக பேசியுள்ளார். ஒரு சாதாரண மனிதன் முதலமைச்சராக இருந்தால், என்னென்னவெல்லாம் பேசுவார்கள் என்று பாருங்கள். இன்று ஒரு முதல்வருக்கே இந்த நிலைமை என்றால்,திமுக ஆட்சிக்கு வந்தால் உங்களுக்கெல்லாம் எப்படி பாதுக்காப்பு இருக்கும்? பெண்கள், தாய்மார்களின் நிலை என்னவாகும் என்று சிந்தித்து பாருங்கள்.


தாய்மார்களை கொச்சைப்படுத்தி, இழிவுப்படுத்தி பேசிய திமுகவுக்கு தக்க தண்டனையை நீங்கள் வழங்க வேண்டும். தாய் தான் அனைவருக்கும் உயர்ந்த ஸ்தானம், அதனால் தாயை இழிவாக பேசியவர்களுக்கு ஆண்டவன் தண்டனை வழங்குவார். திமுக ஆட்சிக்கு வந்தால் இதுபோன்ற அராஜகம் செய்வார்கள்” என தெரிவித்தார்.