கடந்த 2010-ம் ஆண்டு அல்லு அர்ஜுன், அனுஷ்கா நடிப்பில் வெளியான வேதம் திரைப்படத்தில் நடித்த தெலுங்கு நடிகர் நாகையா காலமானார். அவருக்கு வயது 77. தமிழில் சிலம்பரசன் நடித்து வானம் என்ற பெயரில் வெளியானது. 

அந்த படத்தில் நடித்து பிரபலமானவர் தான் நாகையா, பிறகு வேதம் நாகையா என்றே அழைக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு நடிகர் வேதம் நாகையா வயது மூப்பு மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரது மறைவு செய்தியை அறிந்த தெலுங்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். 

கடந்த சில மாதங்களாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வேதம் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய அவருக்கு, யே மாயா சேசாவே, ஸ்பைடர், கமனம், நாகவல்லி என 30 படங்களில் நடித்துள்ளார். 

2010ம் ஆண்டு தெலுங்கில் வெளியான வேதம் படத்திற்காக காஸ்டிங் தேர்வு நடத்திக் கொண்ட நேரத்தில் இயக்குனர் கிரிஷ் பார்வையில் ஐதராபாத்தின் தெரு ஒன்றின் ஓரத்தில் நடந்து கொண்ட தன்னை பார்த்து அலுவலகத்துக்கு வரச் சொன்னாராம். அங்கே ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுத்த வசனத்தை படிக்க சொன்னதும் படித்து காட்டினேன், உடனே நீங்க தான் நடிக்கிறீங்க என எனக்கு வாய்ப்பு கொடுத்தார். இப்படித் தான் நடிக்க வந்தேன் என முன்னதாக பேட்டி ஒன்றில் நாகையா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

நல்ல இதயம் கொண்ட மனிதர் ஒருவர் சொர்க்கத்திற்கு சென்றுவிட்டார். நாகையாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என வேதம் படத்தில் அவருடன் இணைந்து நடித்த நடிகை அனுஷ்கா தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்து இரங்கல் தெரிவித்துள்ளார். 

A good soul has ascended to heaven today 😔 My deepest condolences to family of Nagaiah garu and may god bless and comfort them during this time of grief Om Shanthi 🙏🏼

Posted by Anushka Shetty on Saturday, March 27, 2021