வட கொரியா நாட்டில் ஆபாச படம் பார்த்த சிறுவனுக்கு, மிக பயங்கரமான தண்டனை வழங்கி அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது, உலக நாடுகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

எப்போதுமே சர்ச்சைகளுக்குப் பெயர் போன அதிபராகத் திகழ்கிறார் வட கொரியா நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன்.

உலக வல்லரசான அமெரிக்காவுக்கே சவால் விடுக்கும் அளவுக்கு சர்ச்சைக்குப் பெயர் போனவர் தான், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன். தற்போது, ஒரு சிறுவனுக்குத் தண்டனை வழங்கி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார்.

அதாவது, வட கொரியாவை பொறுத்த வரையில் மீடியா என்பது அந்நாட்டின் அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக, உலக நாடுகளில் வட கொரியாவில் நடக்கும் சம்பவங்களை பெரும்பாலும் அறிந்துகொள்ள முடியாது. 

வட கொரியாவில் நடக்கும் சம்பங்கள் எப்போதும் மர்மகாவே இருக்கும். அங்கு ஊடங்கள், சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் மிக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, அவைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. 

இதனால், வட கொரியாவில் நடக்கும் எந்த ஒரு விஷயமும் வெளி உலகத்தின் பார்வைக்கு வருவது மிக அபூர்வமாகவே இருக்கும்.

அதே நேரத்தில், வட கொரியா நாடு முழுவதும் ஆபாச படங்களுக்கு எதிரான நடவடிக்கையை எப்போதும் முன்னெடுத்து வருகிறது. அதன் படி, வட கொரியா நாட்டில் ஆபாச படம் பார்ப்பது மற்றும் அது சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவார்கள் மீது மரண தண்டனை வரை விதிக்கப்பட்டு வருகிறது. 

அதாவது, “ஆபாச படம் பார்ப்பதும், அவற்றை எடுப்பதும், சமூத சீரழிவை அழிக்கும்” என்பது, அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன்னின் அசைக்க முடியாத கருத்தாக இருந்து வருகிறது. 

இந்த நிலையில் தான், வட கொரியா நாட்டில் பள்ளியில் படித்து வரும் சிறுவன் ஒருவன், ஆர்வ கோளாரில் தனது செல்போனில் ஆபாச படம் பார்த்து உள்ளான். இதனை, அந்நாட்டுக் காவல் துறை அதிகாரிகள் ஐபி முகவரியை வைத்து அந்த சிறுவனை எளிதில் கண்டுபிடித்து உள்ளனர்.

இந்த விவகாரம், அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் கவனத்திற்குச் சென்று உள்ளது.

இதனால், ஆபாச படம் பார்த்த குற்றத்திற்காக அந்த சிறுவன் மற்றும் சிறுவனின் குடும்பத்தையும் நாடு கடத்தி உள்ளனர், அதிபர் கிம் ஜாங் உன். 
இதனையடுத்து, ந்த சிறுவனும், அவனது குடும்பத்தினரும் வட கொரியாவின் எல்லையில் அவர்கள் விடப்பட்டு உள்ளதாக வடகொரிய ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதே நேரத்தில், அந்த சிறுவனுக்கு நல்வாய்ப்பாக மரண தண்டனை வழங்கப்படவில்லை என்றும், அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

அத்துடன், சிறுவன் படித்த பள்ளியின் தலைமை ஆசியர்க்கும் அதிரடியாகத் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. அந்நாட்டு சட்டத்தின் படி, பள்ளி மாணவர்கள் தவறு செய்தால் சம்மந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர்க்கும் பொறுப்பு உள்ளது என்பது விதியாக உள்ளது. இதன் காரணமாக, பள்ளியின் தலைமை ஆசிரியர்க்கு தற்போது கடுமையான கூலி வேலை செய்யும் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. இதனால், அவர் தற்போது ஆசிரியர் பணியைக் கைவிட்டு கூலி வேலை செய்யும் பணிக்குத் தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.