ரெட்டை ரோஜா, பகல் நிலவு ஆகிய சீரியல்களில் நடித்து தொலைக்காட்சி பார்வையாளர்கள் இடையே பிரபலமான நடிகை ஷிவானி நாராயணனுக்கு பெரிய ஒரு ரசிகர் கூட்டம் உருவானது. சீரியல்களைத் தாண்டி, சமூக ஊடகங்களில் அழகழகான புகைப்படங்களை வீடியோக்களை வெளியிட்டு கலக்கினார். ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களுக்கும் வீடியோக்களுக்கும் ஒரு பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. 

இந்த சூழலில்தான் ஷிவானி பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிக்பாஸ் வீட்டில் ஷிவானி நாராயணன் மற்றும் பாலாஜி முருகதாஸ் இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்தனர். ஆனால் அவர்கள் இருவரும் தங்களுக்கு நடுவில் காதல் இல்லை என்றால் அவர்களை சொல்லிக் கொண்டனர்.

ஆனாலும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் இது பற்றி அதிகம் விமர்சிக்கவும் செய்தனர். காதல் கண்ணை கட்டுதே என ஆரி ஒரு முறை அவர்கள் இருவரையும் நாமினேட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஷிவானி மீது காதல் சுத்தமாக இல்லை என வெளிப்படையாக கூறிவிட்டார் பாலாஜி.

பலமுறை இது போன்ற பிரச்சனைகள் நடந்த பிறகும் ஷிவானி மற்றும் பாலாஜி இருவரும் நெருக்கமாக தான் இருந்தனர். ஆனால் ஷிவானியின் அம்மா ஒருநாள் பிக்பாஸ் வீட்டுக்கு வந்து அவரை கண்டபடி திட்டினார். அதற்கு பிறகு அவர்கள் இருவரும் நடுவில் இருந்த நெருக்கம் காணாமல் போனது.

ஷிவானி எலிமினேட் ஆன பிறகு இறுதி வாரத்தில் மீண்டும் வீட்டுக்கு வந்த போது பாலாஜியிடம் அதிகம் பேசக்கூட இல்லை. ஷிவானிக்கு maturity இல்லை என ஒருமுறை பாலாஜி கூறியிருந்ததை வீடியோவில் பார்த்த ஷிவானி வீட்டுக்குள் வந்து சண்டை போட்டார். இதனால் நெருக்கமாக இருந்த அவர்கள் இருவருக்கும் நடுவில் பெரிய விரிசல் ஏற்பட்டது.

பிக்பாஸ் முடிந்து தற்போது அனைவரும் அவரவர் பணிகளில் பிசியாக இருக்கிறார்கள். இந்நிலையில் ஷிவானி வடிவேலு ஸ்டைலில் நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வாடி பொட்டபுள்ள பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.